| மண்மகள் இலம்பகம் |
1234 |
|
|
|
(இ - ள்.) கார்மதம் கடந்த வண்கைக் காம்பிலி காவல் மன்ன - முகிலின் செருக்கை அடக்கிய கொடைக்கையனான காம்பிலி நாட்டுக் காவல் வேந்தன்; வார் மதுத் துளிக்கும் மாலை மணிமுடி தொடுத்து நால - மிகுதியாகத் தேன் துளிக்கும் மாலை மணிமுடியிலிருந்து தொங்கும்படி; ஏர்மதக் கேழல் எய்வான் ஏறலும் - அழகிய செருக்கையுடைய பன்றியை எய்வதற்கு விரைந்து ஆழியின்மேல் ஏறினவுடன்; பொறியின் ஏறுண்டு - அதன் விசையினாலே தாக்கப்பட்டு; ஆர்மதக் களிற்று வேந்தர்க்கு அருநகையாக வீழ்ந்தான் - நிறைந்த மதமுடைய யானை மன்னர்க்குப் பெருநகைப்புண்டாக வீழ்ந்தான்.
|
|
(வி - ம்.) வார்மது : வினைத்தொகை. நால - தூங்க. கொடையினால் காரின் மதங்கடந்த. காம்பிலி - ஒருநாடு. கேழல் - பன்றி. எய்வான் : வினையெச்சம். பொறி - இயந்திரம். ஒருநகை என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் என்று கருதவிடனுளது.
|
( 82 ) |
| 2184 |
முலைவட்டப் பூணு முத்து | |
முள்கலிற் கிழிந்து பொல்லா | |
விலைவட்டத் தாம மார்பிற் | |
கோசலத் திறைவ னெய்த | |
குலைவட்டக் கருதி யம்பு | |
வானின்மேற் பூச லுய்ப்பான் | |
சிலைவட்ட நீங்கி விண்மேற் | |
செவ்வனே யெழுந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) முலைவட்டப் பூணும் முத்தும் முள்கலின் கிழிந்து - மங்கையர் முலையிடத்து வளைந்த பூணும் முத்தும் படுதலின் பூக் கிழிந்து; பொல்லா இலைவட்டத் தாமமார்பின் - அழகு சிதைந்த இலைகலந்த வளைந்த மாலையணிந்த மார்பினையுடைய; கோசலத்து இறைவன் - கோசல நாட்டு மன்னன்; எய்த குலைவட்டக் குருதி அம்பு - விட்ட குதையினையுடைய குருதி தோய்ந்த அம்பு; சிலைவட்டம் நீங்கி - வில் வளைவிலிருந்து வெளிப்பட்டு; வானின்மேல் பூசல் உய்ப்பான் - வானிடத்தே போர் செய்வதற்கு; விண்மேல் செவ்வனே எழுந்தது - வானை நோக்கி நேரே எழுந்தது.
|
|
(வி - ம்.) குறிதப்பி வானிற் சென்றது என்க.
|
|
மங்கையரைத் தழுவும்போது முத்தும் பூணும் தன் மார்பிலே முழுகுவதாற் கிழிந்த மலர்மாலையான். குலைவட்டம் - அம்பிற்குதை. உய்ப்பான். பான் : விகுதிபெற்ற வினையெச்சம். இஃது உய்ப்பதற்கு எனப் பொருள்படும். பூசல் போர். அன்று, ஏ : அசைகள்.
|
( 83 ) |