| மண்மகள் இலம்பகம் | 
1246  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) பருதி - வட்டம், 'பருதி போகிய புடை கிளைகட்டி' (பதிற். 74) என்றார் பிறரும். 
 | 
( 102 ) | 
| 2204 | 
அருந்தவக் கிழமை போல |   | 
  விறாதவில் லறாத நாண்வாய்த் |   | 
திருந்தினார் சிந்தை போலுந் |   | 
  திண்சரஞ் சுருக்கி மாறா |   | 
யிருந்தவன் பொறியும் பன்றி |   | 
  யியற்றரும் பொறியு மற்றாங் |   | 
கொருங்குட னுதிர வெய்தா |   | 
  னூழித்தீ யுருமோ டொப்பான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஊழித்தீ உருமொடு ஒப்பான் - ஊழித் தீயையும் இடியேற்றையும் போன்றவன்; அருந்தவக் கிழமைபோல இறாத வில் அறாத நாண்வாய் - அரிய தவப்பயன் போல இறாத வில்லின் அறாத நாணிலே; திருந்தினார் சிந்தை போலும் திண்சரம் சுருக்கி - முனிவரர் உள்ளம் போலத் திண்ணிய கணையை அடக்கி; மாறாய் இருந்தவன் பொறியும் - மாறுபட்டிருந்தவனாகிய கட்டியங்காரனின் நல்வினையும்; பன்றி இயல் தரும் பொறியும் - பன்றி யிருந்த இலக்கணம் அமைந்த பொறியும்; அற்று ஆங்கு ஒருங்கு உடன் உதிர - அற்று அவ்விடத்தே ஒன்று சேர விழும்படி; எய்தான் - எய்தான். 
 | 
| 
    (வி - ம்.) அதனை எய்த அன்றே கட்டியங்காரனும் படுதலின், 'உடன்' என்றார். தவக்கிழமை வில்லுக்கும் நானுக்கும் உவமை, விசயனுக்கு அவை இற்றும் அற்றும் போனமை கருதி இங்கு அவ்வுவமை கூறினார். 
 | 
( 103 ) | 
| 2205 | 
இலங்கெயிற் றேன மேவுண் |   | 
  டிருநிலத் திடித்து வீழக் |   | 
கலங்குதெண் டிரையுங் காருங் |   | 
  கடுவளி முழக்கு மொப்ப |   | 
உலம்புபு முரசங் கொட்டி |   | 
  யொய்யெனச் சேனை யார்ப்பக் |   | 
குலம்பகர்ந் தறைந்து கோமான் |   | 
  கோவிந்தன் கூறி னானே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு - விளங்கும் எயிற்றையுடைய அப் பன்றி அம்பினால் தாக்கப்பெற்று; இடித்து இருநிலத்து வீழ - முழங்கிப் பெருநிலத்தே விழுந்தபோது; கலங்கு தெண்திரையும் காரும் கடுவளி முழங்கும் ஒப்ப - மோது 
 |