| மண்மகள் இலம்பகம் |
1247 |
|
|
|
கின்ற தௌ்ளிய அலைகடலும் முகிலும் பெருங்காற்றும் ஆகியவற்றின் முழக்குப் போல; சேனை உலம்புபு முரசங்கொட்டி ஒய்என ஆர்ப்ப - படைகள் முழங்கி முரசைக் கொட்டி ஒய்என்று ஆரவாரிக்க; கோமான் கோவிந்தன் குலம் பகர்ந்து அறைந்து கூறினான் - அரசனாகிய கோவிந்தன் சீவகனுடைய குலத்தை முதலிற் கட்டியங்காரனுக்குக் கூறிப் பிறகு யாவரும் அறியச் சாற்றினான்.
|
|
(வி - ம்.) இனி, குலத்தைப் பகர்ந்து நின்னைக் கொல்வேன் என்று வஞ்சினம் சாற்றினான் என்றுமாம்.
|
|
ஏனம் - பன்றி, ஏ : பண்பு. இடித்து - முழங்கி. கார் முகில்.
|
( 104 ) |
| 2206 |
வானிடை யொருவன் றோன்றி | |
மழையென முழங்கிச் சொல்லுந் | |
தேனுடை யலங்கல் வெள்வேற் | |
சீவக னென்னுஞ் சிங்கங் | |
கானுடை யலங்கன் மார்பிற் | |
கட்டியங்கார னென்னும் | |
வேன்மிடை சோலை வேழத் | |
தின்னுயிர் விழுங்கு மென்றான். | |
|
|
(இ - ள்.) வானிடை ஒருவன் தோன்றி மழை என முழங்கிச் சொல்லும் - (அப்போது) வானிலே ஒருவன் வந்து நின்று முகில்போல முழங்கி மொழிவான்; தேன் உடை அலங்கல் வெள்வேல் சீவகன் என்னும் சிங்கம் - தேன் பொருந்திய, மாலையணிந்த வெள்ளிய வேலேந்திய சீவகன் என்னும் சிங்கம்; கான்உடை அலங்கல் மார்பின் கட்டியங்காரன் என்னும் மணமுறும் மாலையணிந்த மார்பையுடைய கட்டியங்காரன் என்கிற, வேல்மிடை சோலை வேழத்து - நெருங்கிய வேலாகிய சோலையில் நிற்கின்ற யானையின்; இன்உயிர் விழுங்கும் என்றான் - இனிய உயிரை விழுங்கும் என்றான்.
|
|
(வி - ம்.) ஒருவன் : இயக்கன்.
|
|
மழை - முகில். அலங்கல்-மாலை. கான் - மணம். வேலாகிய மிடைந்த சோலை என்க. வேழம் - யானை.
|
( 105 ) |
வேறு
|
| 2207 |
விஞ்சையர் வெம்படை கொண்டுவந் தாயென | |
வஞ்சுவ லோவறி யாயென தாற்றலை | |
வெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னொடு | |
வஞ்சனை வஞ்ச மறுத்திடு கென்றான். | |
|