மண்மகள் இலம்பகம் |
1257 |
|
|
பனைமிசைப் பல பதினாயிரங் குலைதரை யுருள்வபோல்” (2 : 1-2) என்றார் பரிபாடலினும்.
|
( 126 ) |
2228 |
பணைமுனிந் தாலுவ பைம்பொற் றாரின | |
கணைவிசை தவிர்ப்பன கவரி நெற்றிய | |
துணையமை யிளமைய தோற்ற மிக்கன | |
விணைமயிர்ப் புரவியோ டிவுளி யேற்றவே. | |
|
(இ - ள்.) பணை முனிந்த ஆலுவ - பந்தியில் நிற்றலை வெறுத்து முழங்குவன; பைம்பொன் தாரின - புதிய பொன் கிண்கிணி மாலையின; கணைவிசை தவிர்ப்பன - தம் மேலிருந்து எய்யும் அம்பின் விரைவை முந்திச் சென்று தடுப்பன; கவரி நெற்றிய - கவரி அணிந்த நெற்றியின; துணை அமை இளமைய - போரிற்கு உதவியான இளமையன; தோற்றம் மிக்கன - வடிவு மிக்கனவாகிய; இணைமயிர்ப் புரவியோடு இவுளி ஏற்ற - ஒத்த மயிரையுடைய புரவியும் புரவியும் தம்மிற் போரைத் தொடங்கின.
|
(வி - ம்.) பணை - குதிரைப்பந்தி. ஆலுவ - முழங்குவன. எய்த கணைக்குமுன் சென்ற அதன் வேகத்தைத் தவிர்ப்பன.
|
( 127 ) |
2229 |
கூருளி முகம்பொரக் குழிசி மாண்டன | |
வாரொளி யமைந்தன வாய்பொற் சூட்டின | |
காரொளி மின்னுமிழ் தகைய காலியற் | |
றேரொடு தோ்தமுட் சிறந்து சோ்ந்தவே. | |
|
(இ - ள்.) கூர் உளி முகம்பொர - கூரிய உளியால் தொழிற் படுதலின்; குழிசி மாண்டன - நடுவில் நிற்குங் குறடுகள் சிறப்புற்றவை; ஒளிஆர் அமைந்தன - ஒளியுடைய ஆரக் கால்கள் பொருந்தியவை; ஆய்பொன் சூட்டின - பொன்னாலான சூட்டினை யுடையவை; கார்ஒளி மின்உமிழ் தகைய - காரில் தோன்றும் மின்னொளியைத் தாம் உமிழுந் தகையவை; கால் இயல் தேரொடு தேர் தம்உள் சிறந்து சேர்ந்த - (ஆகிய) உருளையாற் செல்லுதலையுடைய தேரும் தேரும் தம்மின் மிகுந்து போரைத் தொடங்கின.
|
(வி - ம்.) கூருளி - உளியில் ஒருவகை. பொருதல் - ஈண்டுச் செதுக்குதல். குழிசி - குறடு; குடம். மாண்டன - மாட்சிமையுடையன. கால் - உருளை. தமுள் - தம்முள். சேர்ந்த - போர் செய்தற்கு நெருங்கின.
|
( 128 ) |
2230 |
அஞ்சன மெழுதின கவள மார்ந்தன | |
குஞ்சரங் கூற்றொரு கொம்மை கொட்வே | |
வஞ்சன வரைசிற குடைய போல்வன | |
மஞ்சிவர் குன்றென மலைந்த வேழமே. | |
|