மண்மகள் இலம்பகம் |
1262 |
|
|
சேர்ந்த மலை போன்றன; கதம் சிறந்து கொடி அணிந்த உருவத் தேர் இறமுருக்கி - சினம் மிகுந்து கொடி கட்டிய அழகிய தேரை அழியுமாறு கெடுத்து; உருள் நேமி சுமந்து எழுந்து - வட்டமான உருளைச் சுமந்து எழுந்து; பருதி சேர் வரைபோலப் பகட்டினம் பரந்தன - ஞாயிறு சேர்ந்த மலைபோலச் சில யானைத் திரள் பரவின.
|
(வி - ம்.) கருவி : யானைக்கு அணியும் ஒரு கருவி. இற முருக்கி - பொடியாகக் கெடுத்து.
|
( 136 ) |
2238 |
மாலைவாய் நெடுங்குடைமேன் | |
மதயானைக் கைதுணிந்து | |
கொளவீழ்ந்து கிடந்தன | |
மின்னிலங்கு மயில்வாளாற் | |
மேலைநீள் விசும்புறையும் | |
வெண்மதியம் விசும்பிழுக்கி | |
நீலமா சுணத்தோடு | |
நிலத்திழிந்த தொத்தனவே. | |
|
(இ - ள்.) மதயானை கோலநீள் கொழுங்குருதி கொள - மதயானையின் கோலம் மிகுதியான செழுவிய குருதியைக் கொள்ளுமாறு; கை துணிந்து - கைகள் அற்று; மாலைவாய் நெடுங் குடைமேல் - மாலையை உடைய பெரிய குடையின்மேல்; வீழ்ந்து கிடந்தன - விழுந்து கிடந்தவை; மேலைநீள் விசும்பு உறையும் வெண்மதியம் - முன்பு நீண்ட வானிலே தங்கிய வெள்ளிய திங்கள்; விசும்பு இழுக்கி - வானத்தினின்றும் நழுவி; நீல மாசுணத்தோடு நிலத்து இழிந்தது ஒத்தன - கரும்பாம்புடன் நிலமிசை வீழ்ந்ததைப் போன்றன.
|
(வி - ம்.) இச் செய்யுளுடன்,
|
”இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
|
ஆடியல் யானைத் தடக்கை ஒளிறுவாள்
|
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை
|
கோடுகொள் ஒண்மதியை நக்கும்பாம் பொக்குமே”
|
என்னும் களவழிச் (22) செய்யுட் பகுதியை ஒப்பிடுக.
|
( 137 ) |
2239 |
அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கி | |
குருவிசோ் வரைபோன்ற குஞ்சரங் கொடியணிந்த | |
குஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழிவிட் டுமிழ்குருதி | |
யிங்குலிக வருவிபோன் றெவ்வாயுந் தோன்றினவே. | |
|