| மண்மகள் இலம்பகம் |
1264 |
|
|
|
வாய் - தம் மனைவியர்க்கு அமிர்தம் கொடுத்த, கடலில் உண்டாகும் பவழத் துண்டம் அனைய வாயை; ஏது இலாப்புள் உண்ணக் கொடேம் என்று - அவ்வமிர்தத்தை உண்ணத் தகுதியில்லாத பறவைகள் உண்ணக் கொடேம் என்றாற்போல; வாய்மடித்து - வாயை மடித்து; காது அணிந்த பொன் தோடும் குண்டலமும் நக நகா - காதில் அணிந்த பொன்னாலாகிய தோடும் குண்டலமும் நகைக்கத் தாமும் நகைத்து; விஞ்சையர்போல் கிடந்தனர். வித்தியாதரைப்போற் கிடந்தனர்.
|
|
(வி - ம்.) ஏது - காரணம். உயிர்போகாதாரைப்போற் கிடத்தலின், 'விஞ்சையர்போல்' என்றார்.
|
( 140 ) |
| |
|
(இ - ள்.) கொழுநிணப் புலாற் சேற்றுள் குடர்வாங்கு குறுநரிகள் - கொழுவிய நிணமாகிய, புலால் நாறும் சேற்றிலிருந்து குடரை வலிக்கும் நரிகள்; தொடர் வாங்கு கதநாய்போல் தோன்றின - சங்கிலியை வலிக்கும் நாய்போல் தோன்றின; படர் தீரத் தொடித் திண்தோள் கொண்டு எழுந்த பறவைகள் - இரைதேடும் நினைவு தீரத். தொடியணிந்த திண்ணிய தோளைக் கொண்டு எழுந்த பறவைகள்; படநாகம் உடனே கொண்டு எழுகின்ற உவணப்புள் ஒத்தன - படநாகத்தைத் தம்முடன் கொண்டு வானில் எழுகின்ற கலுழனைப் போன்றன.
|
|
(வி - ம்.) 'குடர்கொண்டு வாங்கும் குறுநரி கந்தில
|
| தொடரொடு கோணாய் புரையும்.' (களவழி. 34) |
|
| எவ்வாயும் ஓடி வயவர் துணித்திட்ட |
|
| கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் |
|
| ஐவாய் வயநாகம் கவ்வி விசும்பிவரும் |
|
| செவ்வாய் உவணத்தில் தோன்றும்.' (களவழி. 26) |
|
| |