பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1266 

வேறு

2245 காளமா கிருளைப் போழ்ந்து
  கதிர்சொரி கடவுட் டிங்கள்
கோளரா விழுங்க முந்நீர்க்
  கொழுந்திரைக் குளித்த தேபோ
னீளம ருழக்கி யானை
  நெற்றிமேற் றத்தி வெய்ய
வாளின்வாய் மதனன் பட்டான்
  விசயன்போர் விசயம் பெற்றான்.

   (இ - ள்.) காளம் ஆகு இருளைப் போழ்ந்து - கருமை மேலும் மேலும் பெருகா நின்ற இருளைக் கெடுத்து; கதிர் சொரி கடவுள் திங்கள் - கதிரைப் பெய்கின்ற தெய்வத் திங்கள்; கோள் அரா விழுங்க - கொலையில் வல்ல பாம்பு விழுங்குதலின்; முந்நீரக் கொழுந்திரை குளித்ததேபோல் - உயரப்போய்ப் பின்பு கடலின் கொழுவிய அலையிலே குளித்தாற்போல்; மதனன் - மதனன் என்பான்; நீள அமர் உழக்கி - பெரும்போரைச் செய்து; யானை நெற்றிமேல் தத்தி - (விசயனின்) யானை நெற்றியிலே பாய்ந்து; வெய்ய வாளின் வாய்ப்பட்டான் - விசயனுடைய கொடிய வாளின் வாயிலே விழுந்தான்; விசயன் போர் விசயம் பெற்றான் - விசானும் போரிலே வெற்றியுற்றான்.

   (வி - ம்.) காளம் - கருநிறம். ஆகிருள் : வினைத்தொகை. கடவுளாகிய திங்கள் என்க. கோளரா: பண்புத்தொகை. முந்நீர் - கடல்.

( 144 )
2246 மன்மத னென்னுங் காளை
  மணியொலிப் புரவித் தோ்மேல்
வின்மழை சொரிந்து கூற்றிற்
  றெழித்தனன் றலைப்பெய் தார்ப்பக்
கொன்மலி மார்பன் பொற்றோ்
  கொடுஞ்சிலை யறுப்பச் சீறிய
பொன்வரைப் புலியிற் பாய்ந்து
  பூமிமேற் றோன்றி னானே.

   (இ - ள்.) மன்மதன் என்னும் காளை - அவன் தம்பி மன்மதன் என்பவன்; மணி ஒலிப் புரவித் தேர் மேல் - மணி ஒலியையுடைய குதிரை பூட்டிய தேர்மேல் ஏறி; கூற்றின் தெழித்தனன் - கூற்றுவனைப் போல் முழங்கி; தலைப் பெய்து - விசயனை வளைத்து; வில் மழை சொரிந்து ஆர்ப்ப - வில்லாலே கணை மழை பெய்து ஆரவாரிக்க; கொன்மலி மார்பன் - அச்சம்