| மண்மகள் இலம்பகம் |
1275 |
|
|
வேறு
|
| 2260 |
மண்காவலை மகிழாதிவ ணுடனேபுக ழொழிய | |
விண்காவலை மகிழ்வீர்நனி யுளிரோவென விபுலன் | |
வண்காரிருண் மின்னேயுமிழ் நெய்வாயதொ ரயில்வாள் | |
கண்காவல கழுகோம்புவ துயராநனி வினவும். | |
|
|
(இ - ள்.) மண்காவலை மகிழாது இவணுடனே புகழ் ஒழிய - உலகாள்வதிலே விருப்பம் இன்றி, இவ்வுலகுடனே புகழ் நிற்க; விண்காவலை நனி மகிழ்வீர் உளிரோ என - (என்னுடன் பொருது) வானுலகை மிகவும் விரும்பும் வீரர் இருக்கின்றீரோ? என்று; வண்இருள் கார் மின்னே உமிழ் நெய்வாயது - பேரிருளினை யுடைய காரிலே மின்னையே உமிழும் நெய்தோய்ந்த வாயையுடையதும்; கண் காவல் கழுகு ஓம்புவது - கண்ணைக் குத்துவனவாகிய கழுகுகளை ஓம்புவதுமாகிய; ஓர் அயில்வாள் உயரா - ஒரு கூரிய வாளை உயர்த்தி நின்று; விபுலன் நனி வினவும் - விபுலன் நன்கு வினவுவான்.
|
|
(வி - ம்.) நபுலன் சென்று மீளுதலின். இவன் வினவிச் சென்றான்.
|
|
இவண் - இவ்வுலகத்தின்கண். நும்புகழ் நிற்ப, அஃதொழியச் சென்று விண்காவலை மகிழ்வீர் என்றவாறு. காவல் - குத்துவ. உயரா - உயர்த்து. பகைவரைக் கொன்று அவருடலைக் கழுகுண்ண ஈந்து அதனை ஓம்பும் வாள் என்றவாறு.
|
( 159 ) |
| 2261 |
வீறின்மையின் விலங்காமென மதவேழமு மெறியா | |
னேறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான் | |
மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையு மெறியா | |
னாறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன். | |
|
|
(இ - ள்.) அயிலுழவன் - வேலேந்திய உழவனாகிய அவ் விபுலன்; மத வேழமும் விலங்காம் என - மத களிற்றை எறிந்தாலும் விலங்கை எறிந்ததாகும் என எண்ணி; வீறு இன்மையின் எறியான் - அதனாலே வென்றியின்மையின் அதனையும் வெட்டாமல்; ஏறு உண்டவர் - முன்பு வெட்டுண்டவர்; நிகராயினும் - சமமானவராயினும் ; பிறர் மிச்சில் என்று எறியான் - பிறர் படை தீண்டிய எச்சில் என்று அவரையும் வெட்டாமல்; இளையாரையும் - தனக் கிளையவரையும்; மாறு அன்மையின் மறம் வாடும் என்று - நிகரன்மையின் வீரம் இழுக்குறுமென்று நினைத்து; எறியான் - வெட்டாமல்; முதியாரையும் ஆறன்மையின் - தன்னின் முதிர்ந்தோரையும் எறிதல் அறமன்மையின்; எறியான் - வெட்டாமல் நின்றான்
|