| நாமகள் இலம்பகம் |
128 |
|
வேறு
|
|
| 234 |
அந்தரத் தார்மய னேயென வையுறுந் |
| |
தந்திரத் தாற்றம நூல்கரை கண்டவன் |
| |
வெந்திற லான்பெருந் தச்சனைக் கூவியொ |
| |
ரெந்திர வூர்தி யியற்றுமி னென்றான். |
|
|
(இ - ள்.) தந்திரத்தால் அந்தரத்தார் மயனே என ஐயுறும் தமநூல் கரைகண்டவன் - தொழிலால் வானவர் தச்சனாகிய மயனேயென்று துணிந்து வடிவால் ஐயமுறும், சிற்பநூலைக் கரைகண்டவனாகிய; வெந்திறலான் பெருந் தச்சனைக் கூவி - சிறந்த ஆற்றலுடையவனாகிய பெரிய தச்சன் ஒருவனைக் கூப்பிட்டு; ஓர் எந்திர வூர்தி இயற்றுமின் என்றான் - ஒரு பொறியூர்தியைப் பண்ணுமின் என்று மன்னன் கூறினான்.
|
|
|
(வி - ம்.) இயற்றுமின் : ஒருமை பன்மை மயக்கம் . ஊர்தி - ஏறப்படுவது.
|
|
|
அந்தரத்தார் - தேவர். தந்திரம் தொழில் - தம : ஆறாவதன் பன்மையுருபு. நூல் - ஈண்டுச் சிற்பநூல். வெந்திறலான் என்பதனைச் சச்சந்தன் எனினுமாம்.
|
( 205 ) |
| 235 |
பல்கிழி யும்பயி னுந்துகி னூலொடு |
| |
நல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றன |
| |
வல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச் |
| |
செல்வதொர் மாமயில் செய்தன னன்றே. |
|
|
(இ - ள்.) நலஞ்சான்றன பல்கிழியும் பயினும் துகில் நூலொடு நல்லரக்கும் மெழுகும் அல்லனவும் அமைத்து - நலஞ் சிறந்தனவாகிய பல சீலைகளும் பயினும் வெள்ளிய நூலும் நல்ல அரக்கும் மெழுகும் ஒழிந்தனவும் பொருந்தக் கொணர்ந்து சேர்த்து; ஆங்கு எழுநாளிடைச் செல்வதோர் மாமயில் செய்தனன் - அரசன் கூறியவாறே, ஏழு நாட்களில், செல்வதொரு மயிலைச் செய்தான்.
|
|
|
(வி - ம்.) கிழி - சீலை. பயின் - பற்றுதற்குரியன. துகில்நூல்- வெள்ளை நூல்
|
( 206 ) |
| 236 |
பீலிநன் மாமயி லும்பிறி தாக்கிய |
| |
கோலநன் மாமயி லுங்கொடு சென்றவன் |
| |
ஞாலமெல் லாமுடை யானடி கைதொழு |
| |
தாலுமிம் மஞ்ஞை யறிந்தரு ளென்றான். |
|
|
(இ - ள்.) பீலிநன் மாமயிலும் பிறிது ஆக்கிய கோலம் பீலிநன் மாமயிலும் - தோகையையுடைய அழகிய உண்மை
|
|