| மண்மகள் இலம்பகம் |
1285 |
|
|
|
மதயானை (தன்னைக் குத்திய கோமுகன் யானையை) எதிர்த் தாக்காகக் குத்துதலின்; முத்துடை மருப்பு வல்லே உடைந்து - முத்துக்களையுடைய கொம்பு முரிந்து; முத்து ஒழுகு குன்றின் - முத்துகள் ஒழுகும் மலைபோல; மத்தக யானை வீழ்ந்து வயிரம் கொண்டு ஒழிந்தது - அந்த யானை விழுந்து செற்றத்துடன் இறந்தது; ஆங்குப் பத்திரக் கடிப்பு மின்னப் பதுமுகன் பகடு பேர்த்தான் - அப்பொழுது அழகிய குதம்பை என்னும் காதணி ஒளிரப் பதுமுகன் தன் களிற்றை மீட்டனன்.
|
|
(வி - ம்.) இத்துணையும் பதுமுகன் போர் கூறப்பட்டது.
|
|
'நித்திலமணிவண் டென்பது' பதுமுகன் யானையினுடைய பெயர். வல்லே - விரைவின். வயிரம் - செற்றம். பத்திரம் - நலம். கடிப்பு - குதம்பை.
|
( 175 ) |
| 2277 |
பத்திரக் கடிப்பு மின்னப் | |
பங்கியை வம்பிற் கட்டிக் | |
கொத்தலர்த் தும்பை சூடிக் | |
கோவிந்தன் வாழ்க வென்னாக் | |
கைத்தலத் தெஃக மேந்திக் | |
காளைபோய் வேறு நின்றான் | |
மத்தக யானை மன்னர் | |
வயிறெரி தவழ்ந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) பத்திரக் கடிப்பு மின்ன - அழகிய குதம்பை ஒளிர; பங்கியை வம்பின் கட்டி - தலைமயிரைக் கயிற்றாற் கட்டிக் கொண்டு; கொத்து அலர் தும்பை சூடி - கொத்தாக மலருந் தும்பையை அணிந்து; கைத்தலத்து எஃகம் ஏந்தி - கையிலே வேலை ஏந்தி; கோவிந்தன் வாழ்க என்னா - கோவிந்தன் வாழ்க என்று வாழ்த்தி; காளைபோய் வேறு நின்றான் - சிங்கநாதன் என்னும் காளை சென்று தனியே (பகைவருக்கு எதிரில்) நின்றான்; மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது - யானையையுடைய பகையரசரின் வயிற்றிலே (அப்போது) தீ பரவியது.
|
|
(வி - ம்.) பங்கி - தலைமயிர். வம்பு-கச்சு. தும்பை - போர்புரியுங்காற் சூடும் மாலை. கோவிந்தன் தலைவனாகலின், வாழ்த்தினான், காளை: சிங்கநாதன். வயிறு எரிதவழ்ந்தது என்றது பெரிதும் அஞ்சினார் என்றவாறு.
|
( 176 ) |
| 2278 |
மேகலைப் பரவை யல்குல் | |
வெள்வளை மகளிர் செஞ்சாந் | |
தாகத்தைக் கவர்ந்து கொண்ட | |
வணிமுலைத் தடத்து வைகிப் | |
|