| நாமகள் இலம்பகம் | 
129  | 
  | 
| 
 மயிலையும், செய்யப்பட்ட அழகிய வேறு தோகை மயிலையும்; அவன் கொடுசென்று - அத் தச்சன் கொண்டுபோய்; ஞாலம் எல்லாம் உடையான் அடிகை தொழுது - நிலவுலகு முழுதும் உடைய சச்சந்தன் அடியைக் கையால் வணங்கி; ஆலும் இம்மஞ்ஞை அறிந்தருள் என்றான் - (இம் மயில்களில்) அசையும் உண்மை மயில் அறிந்தருள்க என்றனன். 
 | 
  | 
| 
    (வி - ம்.) மயிற்பொறி என்பது தோன்ற ஆக்கிய கோல நன்மயில் என்றார். பீலியை இரண்டற்கும் ஏற்றுக. 
 | 
( 207 ) | 
|  237 | 
நன்னெறி நூனயந் தானன்று நன்றிது |  
|   | 
கொன்னெறி யிற்பெரி யாயிது கொள்கென |  
|   | 
மின்னெறி பல்கல மேதகப் பெய்ததொர் |  
|   | 
பொன்னறை தான்கொடுத் தான்புகழ் வெய்யோன். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இது நல்நெறி நூல் நயந்தான் நன்று நன்று - இம் மயில் நல்ல நெறியுடைய நூலின் நயத்தினைத் தான் உடையதாக இருந்தது, மிக நன்று; கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என - கொல்லுத் தொழிலிற் சிறந்தவனே இதனை ஏற்றுக்கொள்க என்று; மின் எறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர்பொன் அறை புகழ் வெய்யோன் தான் கொடுத்தான் - மின்னைக் கெடுக்கும் பல கலன்களை நன்குறச் சேர்த்துள்ள ஒரு பொன் அறையைப் புகழை விரும்பும் அரசன் நல்கினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) மின்எறி - ஒளி வீசும் என்றும் ஆம். 
 | 
  | 
| 
    நன்று நன்றென்னும் அடுக்கு வியப்பாற் றோன்றியது. இது நன்னெறி நூல்நயம் தான் என மாறுக. கொல்நெறி - கொல்லுந் தொழில். 
 | 
( 208 ) | 
|  238 | 
ஆடியன் மாமயி லூர்தியை யவ்வழி |  
|   | 
மாடமுங் காவு மடுத்தொர்சின் னாள்செலப் |  
|   | 
பாடலின் மேன்மேற் பயப்பயத் தான்றுரந் |  
|   | 
தோட முறுக்கி யுணர்த்த வுணர்ந்தாள். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆடுஇயல் மாமயில் ஊர்தியைத் தான் பாடலின் பயப்பய மேன்மேல் துரந்து - ஆடுதல் பொருந்திய மயிலாகிய அவ் வூர்தியை விசயைதான் பாட்டுப்போலே மெல்ல மெல்ல மேலும் மேலும் செலுத்தி; மாடமும் காவும் மடுத்துச் சில்நாள் செல - மாடத்தினும் பொழிலினும் ஆகக் கொண்டுசென்று சில நாட்கள் சென்ற பிறகு; ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள் - (ஒருநாள்) கற்பித்தவன் விசையுடன் ஓடுமாறு முறுக்கி உணர்த்த அவளும் உணர்ந்தாள். 
 | 
  |