| மண்மகள் இலம்பகம் | 
1298  | 
 | 
  | 
| 
    குருதி வரன்றிச் சுமந்து ஈர்த்து ஒழுகிக் செல்லும்படி, குமரன் வில் வளைந்தது என்க. 
 | 
( 196 ) | 
| 2298 | 
கேழ்கிள ரெரிகட் பேழ்வாய்க் |   | 
  கிளர்பெரும் பாம்பி னோடுஞ் |   | 
சூழ்கதிர்க் குழவித் திங்க |   | 
  டுறுவரை வீழ்வ தேபோற் |   | 
றாழிருந் தடக்கை யோடுந் |   | 
  தடமருப் பிரண்டு மற்று |   | 
வீழ்தரப் பரந்த வப்பு |   | 
  நிழலிற்போர் மயங்கி னாரே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கேழ் கிளர் எரிகண் பேழ்வாய் கிளர் பெரும் பாம்பினோடும் - நிறம் விளங்கும் எரியுங் கண்ணையும் பெரிய வாயையுமுடைய பெரிய பாம்பினுடன்; சூழ் கதிர்க் குழவித் திங்கள் துறுவரை வீழ்வதே போல் - சூழ்ந்த ஒளியை யுடைய பிறைத் திங்கள் பெரிய மலையினின்றும் வீழ்தல் போல; தாழ் இருந் தடக்கையோடும் தடமருப்பு இரண்டும் அற்று - நீண்ட பெரிய துதிக்கையுடன் பெரிய கொம்புகள் இரண்டும் அற்று; வீழ்தர - யானையினின்றும் விழ; பரந்த அப்பு நிழலில் போர் மயங்கினார் - பரவிய அம்பு நிழலாலே அரசர் மனங் கலங்கிப் போரை அறிந்திலர். 
 | 
| 
    (வி - ம்.) கேழ் - நிறம். எரிகண்: வினைத்தொகை. பேழ் - பெரிய. குழவித் திங்கள் - பிறை, துறுவரை - பெரிய மலை, தடமருப்பு - பெரிய கொம்பு, அப்பு நிழல் - வானின்கட் பரவிய அம்புகளாலுண்டான நீழல். மயங்கினார் - கலங்கினர். 
 | 
( 197 ) | 
| 2299 | 
ஆடவ ராண்மை தோற்று |   | 
  மணிகிளர் பவழத் திண்கை |   | 
நீடெரி நிலைக்கண் ணாடிப் |   | 
  போர்க்களத் துடைந்த மைந்தர் |   | 
காடெரி கவரக் கலலென் |   | 
  கவரிமா விரிந்த வண்ண |   | 
மோடக்கண் டுருவப் பைந்தா |   | 
  ரரிச்சந்த னுரைக்கின் றானே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆடவர் ஆண்மை தோற்றும் - ஆடவரின் வீரம் விளங்குகின்ற; அணிகிளர் பவழத் திண்கை நீடு எரி நிலைக் கண்ணாடி - அழகு விளங்கும் பவழத்தாலாகிய கையையுடைய பெரிய ஒளியையுடைய நிலைக் கண்ணாடியாகிய; போர்க்களத்து 
 |