| மண்மகள் இலம்பகம் | 
1302  | 
 | 
  | 
| 
 பொருதற்குரிய வில்லிலே அம்புமழை தாரை சொரிதல்போல மாறாது நின்றது. 
 | 
| 
    (வி - ம்.) உராய் - உலவி. முகில் வலமேறிச் சென்றால் மழைமிகும் . மின்னு - மின்னல். குடதிசை - மேற்றிசை. குளிறுபு - முழங்கி, பாங்கு - அழகு. 
 | 
( 203 ) | 
| 2305 | 
அற்றுவீழ் தலைகள் யானை யுடலின்மே லழுந்தி நின்ற |   | 
பொற்றதிண் சரத்திற் கோத்த பொருசரந் தாள்க ளாகத் |   | 
தெற்றிமேற் பூத்த செந்தா மரைமலர் போன்ற செங்கண் |   | 
மற்றத்தா துரிஞ்சி யுண்ணும் வண்டின் மொத்த வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அற்று வீழ் தலைகள் - அவ் வம்புகளால் அற்று வீழ்கின்ற தலைகள்; யானை உடலின் மேல் அழுந்தி நின்ற பொற்ற திண் சரத்திற் கோத்த - பட்ட யானைகளின் மெய்யின் மேல் அழுந்தி நின்ற பொலிவையுடைய அம்புகளிற் கோத்தவை; பொருசரம் தாள்களாக - அந்த அம்புகள் தாள்களாக; தெற்றி மேல் பூத்த செந்தாமரை மலர் போன்ற - திண்ணைகளிலே மலர்ந்த செந்தாமரை மலர்களைப் போன்றன; செங்கண் அத்தாது உரிஞ்சி உண்ணும் வண்டினம் ஒத்த - அவற்றின் செங்கண்கள் அம் மலரின் தேனை உரிஞ்சிப் பருகும் வண்டுகளைப் போன்றன. 
 | 
| 
    (வி - ம்.) வில் வன்மையாற் கணையிற் கோக்க எய்தான். மற்று, அன்று, ஏ : அசைகள். 
 | 
( 204 ) | 
வேறு
 | 
| 2306 | 
திங்க ளோடுடன் குன்றெலாந் |   | 
  துளங்கி மாநிலஞ் சோ்வபோற் |   | 
சங்க மத்தகத் தலமரத் |   | 
  தரணி மேற்களி றழியவும் |   | 
பொங்கு மாநிரை புரளவும் |   | 
  பொலங்கொ டோ்பல முறியவுஞ் |   | 
சிங்கம் போற்றொழித் தார்த்தவன் |   | 
  சிறுவர் தோ்மிசைத் தோன்றினார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) திங்களோடு உடன் குன்று எலாம் துளங்கி மாநிலம் சேர்வபோல் - திங்களுடன் சேரக் குன்றுகள் யாவும் அசைந்து பெருநிலத்தே வீழ்வனபோல; களிறு மத்தகத்து சங்கம் அலமத் தரணிமேல் அழியவும் - (சீவகன் படையிலுள்ள) களிறுகள் தம் மத்தகத்திலே சங்குகள் அசைய நிலமிசை விழுந்து அழியவும்; பொங்கும் மாநிரை புரளவும் - கிளரும் குதிரைத் திரள் நிலமிசை வீழ்ந்து புரளவும்; பொலம்கொள் 
 |