மண்மகள் இலம்பகம் |
1307 |
|
|
(இ - ள்.) தன் மதம் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம் - தன் மதத்திலே திளைத்த வண்டின் திரள் சென்று தங்கிய காட்டிலே உள்ள யானைகள்; பின் மதம் செறித்திட்டு அஞ்சிப் பிடிமறந்து - பின்னர் அவற்றின் நாற்றித்தாலே அஞ்சி மதத்தை அடக்கிப் பிடியை மறந்து; இரிந்து போகும் - கெட்டுப் போதற்குக் காரணமான; வெல் மதக் களிற்று வெய்ய அசனி வேகத்தின் மேலான் - வென்றியை யுடைய மதயானையாகிய கொடிய அசனி வேகத்தின் மேலமர்ந்துள்ள; மின் உமிழ் மாலை வேந்தன் - ஒளியை உமிழும் மாலையை யுடைய கட்டியங்காரன்; வீரற்கு விளம்பினான் - சீவகனை நோக்கிக் கூறினான்.
|
(வி - ம்.) இதனால் அசனிவேகத்தின் வலிமை கூறினார்.
|
( 212 ) |
2314 |
நல்வினை யுடைய நீரார் | |
நஞ்சுணி னமுத மாகு | |
மில்லையே லமுது நஞ்சா | |
மின்னதால் வினையி னாக்கங் | |
கொல்வல்யா னிவனை யென்று | |
மிவன்கொல்லு மென்னை யென்று | |
மல்லன நினைத்தல் செல்லா | |
ரறிவினாற் பெரிய நீரார். | |
|
(இ - ள்.) நல்வினை உடைய நீரார் நஞ்சு உணின் அமுதம் ஆகும் - நல்லூழ் கொண்ட தன்மையார் நஞ்சினைப் பருகினும் அமுதம் ஆகும்; இல்லையேல் அமுதும் நஞ்சாம் - அந் நல்வினையின்றேல் (அழியாதிருத்தற்குப் பருகின) அமுதமும் நஞ்சாகும்; வினையின் ஆக்கம் இன்னது - இருவினைகளின் ஆக்கமும் இத்தன்மையாக இருந்தது; யான் இவனைக் கொல்வல் என்றும் - நான் இவனைக் கொல்வேன் என்றும்; இவன் என்னைக் கொல்லும் என்றும் - இவன் என்னைக் கொல்வான் என்றும்; அறிவினால் பெரிய நீரார் அல்லன நினைத்தல் செல்லார் - அறிவினாற் சிறந்த இயல்பினார் பொருளல்லவற்றை எண்ணமாட்டார்.
|
(வி - ம்.) எனவே, இது நின் செயலென்று கருதவேண்டா என்றான். தன் சிறையை அவன் நீங்கின தன்மையையும் தனக்கு அரணாக இட்ட வியூகம் கேட்ட தன்மையையும் எண்ணி இங்ஙனம் கூறினான்.
|
( 213 ) |
2315 |
அகப்படு பொறியி னாரை யாக்குவா ரியாவ ரம்மா | |
மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோ | |
நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட்டிடுத லுண்டே | |
பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே. | |
|