பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1320 

2332 அம்புகை வல்லில் லார்கழன் மள்ளர் திறலேத்த
வம்புகைக் கொண்டா லாரிவற் கீண்டு நிகராவா
ரம்புகை யார்ந்த வந்துகி லல்குல் லவிர்கோதா
யம்புகைக் காணா மையனைக் கையிற் றொழுதென்பார்.

   (இ - ள்.) அம்பு உகை வல்வில் ஆர்கழல் மள்ளர் திறல் ஏத்த - அம்பைச் செலுத்தும் வலிய வில்லேந்திய, செறிந்த கழலையுடைய வீரர்கள் தன் ஆற்றலைப் புகழ; அம்பு கைக்கொண்டால் ஈண்டு இவற்கு நிகராவார் ஆர் - உலகைக் கைபற்றினால் இங்கு இவனுக்குச் சமமானவர் யார்; அம் புகை ஆர்ந்த அம் துகில் அல்குல் அவிர் கோதாய்! - அழகிய புகை ஊட்டப் பெற்ற துகிலை அணிந்த அல்குலையுடைய கோதையே!; ஐயனைக் கையால் தொழுது - சீவகனைக் கையால் தொழுததால்; அம்பு கைக் காணாம் என்பார் - வளையைக் கையில் காணோம் என்பார்.

   (வி - ம்.) இரண்டாம் அடியில் 'அம்பு' என்பது நீர். அது நீர் சூழ்ந்த உலகிற்கு ஆகுபெயராயிற்று.

   உகை - உகைக்கின்ற; செலுத்துகின்ற மள்ளர் - வீரர். அம்புகை - அழகிய புகை. ஈற்றடியில் அம்பு - வளையல்.

( 6 )
2333 மைத்துன நீண்ட மாமணி மாடம் மிசையேறி
மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் மலர்தூவ
மைத்துன மன்னர் மால்களி றேறிப் புடைசூழ
மைத்துன நீண்ட மாமணி வண்ண னவனொத்தான்.