பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1321 

   (இ - ள்.) கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் - கோள்களாலே திக்குகளில் ஓடுகின்ற, கூம்பு உயர்ந்த மரக்கலம் தந்த; கோடிப் பட்டின் கொள்கொடி நெடுமாடம் கூடப் புனைவாரும் - புதிய பட்டினால் தைத்த கொடிகளை மாடங்களிலே சேரக் கட்டுவாரும்; கோடித்தானைக் கொற்றவற் காண்பான் - கோடிப் படையையுடைய அரசனைக் காண்பதற்கு; செம்பொன் கொம்பரின் கோடி இழை மின்ன - பொற்கொம்புபோல வளைந்து பூண்ஒளிர; முன்முன் தொழுவாரும் - முன்முன் வந்து தொழுவாருமாயினர்.

   (இ - ள்.) மைதுன நீண்ட மாமணி மாடம் மிசை ஏறி - முகில் நெருங்க உயர்ந்த பெரிய மணிமாடங்களின்மேல் ஏறி ; வாள் மைத்து உன் நீண்ட தடங்கண்ணார் மலர் தூவ - வாள் ஒளி மழுங்கி நினைக்கும்படி நீண்ட பெரிய கண்களையுடைய மகளிர் மலர் சொரிய; மைத்துன மன்னர் மால்களிறு ஏறிப் புடைசூழ - மைத்துன வேந்தர்கள் பெரிய களிறுகளில் ஏறி அருகிற் சூழ; மை துன நீண்ட மாமணி வண்ணன் அவன் ஒத்தான் - கருமை பொருந்த உயர்ந்த நீலமணி வண்ணனைச் சீவகன் ஒத்தான்.

(வி - ம்.) 'துன்ன' என்பன 'துன' என்றும், 'உன்ன' என்பது 'உன' என்றும் வந்தமை விகாரங்கள.் மைத்தல் - ஒளி கெடுதல்; 'மைம் மைப்பினன்று குருடு' (பழ. 188) என்றாற் போல. மணி வண்ணன் : திருமால்.

( 7 )

   வேறு

( 7 )
2334 ஊது வண்டரற் றும்முயர் தாமரைப்
போது பூங்கழு நீரொடு பூத்துடன்
வீதி மல்கின போன்மிளிர் வேற்கணு
மாத ரார்முகப் பூவு மலர்ந்தவே.

   (இ - ள்.) ஊது வண்டு அரற்றும் உயர் தாமரைப் போது - தாதை ஊதுகின்ற வண்டுகள் முரலும் உயர்ந்த தாமரை அரும்புகள்; பூங்கழுநீரொடு பூத்து - அழகிய கழுநீருடன் மலர்ந்து; உடன் வீதி மல்கினபோல் - சேர. தெருவெங்கும் நிறைந்தன போல; மாதரார் முகப்பூவும் மிளிர் வேல்கணும் மலர்ந்த - பெண்களின் முகப்பொலிவும் விளங்கும் வேலனைய கண்களும் பரந்தன.

   (வி - ம்.) தாதூதுவண்டென்க. கழுநீர் - ஒரு நீர்ப்பூ. முகப்பூ - முகப்பொலிவு. தாமரைப்பூ மகளிர் முகத்திற்கும் கழுநீர் கண்களுக்கும் உவமை.

( 8 )
2335 வீணை வித்தகன் வேந்தடு வீங்குதோள்
காணுங் காரிகை யார்கதிர் வெம்முலைப்
பூணு மாரமு மீன்றுபொன் பூத்தலர்ந்
தியாண ரூரம ராபதி போன்றதே.

   (இ - ள்.) வீணை வித்தகன் வேந்து அடுவீங்கு தோள் - யாழ் வல்லனாகிய சீவகனின், பகை மன்னரை வெல்லும் பருத்த தோள்களை; காணும் காரிகையார் கதிர் வெம்முலைப் பூணும் ஆரமும் ஈன்று - காணும் மகளிரையும் ஒளிவிடும் வெம்முலையில் அவர்கள் பூண்ட பூணையும் ஆரத்தையும் ஈன்று; பொன் பூத்து அலர்ந்து - வேய்ந்த பொன்னால் அழகுற்றுப் பரத்தலின் ;