| பூமகள் இலம்பகம் | 
1328  | 
 | 
  | 
| 2348 | 
தீத்தும்மும் வேலான் றிருவாய்மொழி வான்மு ழக்கம் |   | 
வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக் |   | 
காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார் |   | 
சேய்ச்செந் தவிசி நெருப்பென்றெழுஞ் சீற டியார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தீத் தும்மும் வேலான் திருவாய் மொழி - தீயைச் சொரியும் வேலானுடைய அழகிய வாய்மொழியாகிய; வான் முழக்கம் அங்கு வாய்த்துக் கேட்டு - முகில் முழக்கத்தை அவ்விடத்தே வாய்ப்பக் கேட்டு; சேய்ச் செந்தவிசு நெருப்பென்று எழும் சீறடியார் - மிகச் சிவந்த இருக்கையையும் நெருப்பு என்று நீங்கும் சிற்றடியினார்; மடமஞ்ஞைக் குழாத்தின் ஏகி - இளமயிற் குழுவைப்போலச் சென்று; காய்த் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர்தம் பதிகள் புக்கார் - காய்த்த தென்னை சூழ்ந்தனவும், கரும்பு நிறைந்தனவுமான தங்கள் நகரங்களை அடைந்தனர். 
 | 
| 
    (வி - ம்.) மயில் மழைக்கு மகிழ்தலின் மயில்போல் என்றார். 
 | 
| 
    தும்மும் என்றது - காலும் என்பதுபட நின்றது. வேலான் : சீவகன். வாய்த்து - வாய்ப்ப. கேட்ட மஞ்ஞை என இயைப்பினுமாம் 
 | 
( 22 ) | 
| 2349 | 
காதார் குழையுங் கடற்சங்கமுங் குங்கு மமும் |   | 
போதா ரலங்கற் பொறையும்பொறை யென்று நீக்கித் |   | 
தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மா |   | 
மாதார் மயிலன் னவர்சண்பகச் சாம்பலொத்தார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மாது ஆர் மயில் அன்னவர் - காதல் நிறைந்த மயிலைப்போன்றவர்; காதுஆர் குழையும் - காதிலணிந்த குழையையும்; கடல் சங்கமும் - கடலிற் கிடைத்த சங்கினால் ஆகிய அணியையும்; குங்குமமும் - குங்குமத்தையும்; போது ஆர் அலங்கல் பொறையும் - மலராலாகிய மாலைச் சுமையையும்; பொறை என்று நீக்கி - சுமை என்று களைந்துவிட்டு; தாது ஆர் குவளைத் தடங்கண் முத்து உருட்டி விம்மா - தேன் பொருந்திய குவளைபோன்ற தடங்கண்களினின்றும் முத்தனைய நீர்த்துளியை உருட்டி விம்மி; சண்பகச் சாம்பல் ஒத்தார் - சண்பகப்பூ வாடலைப் போன்றனர். 
 | 
| 
    (வி - ம்.) கணவனை யிழத்தலின் இவற்றை நீங்கி, உணவைச் சுருக்கியவராய் நோன்பை மேற்கொண்டனர். 
 | 
( 23 ) | 
| 2350 | 
ஆய்பொற் புரிசை யணியாரகன் கோயி லெல்லாங் |   | 
காய்பொற் கடிகைக் கதிர்க்கைவிளக் கேந்தி மள்ளர் |   | 
வேய்பொன் னறையும் பிறவும்விரைந் தாய்ந்த பின்றைச் |   | 
சேய்பொற் கமல மகள்கைதொழுச் சென்று புக்கான். |   | 
 
 
 |