| பூமகள் இலம்பகம் |
1329 |
|
|
|
(இ - ள்.) மள்ளர் - வீரர்கள்; காய் பொன் கடிகைக் கதிர்க்கை விளக்கு ஏந்தி - காய்ந்த பொன் துண்டங்களாலாகிய ஒளிருங் கைவிளக்கை ஏந்தி; ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் - ஆராய்ந்த பொன் மதில் சூழ்ந்த அழகிய பரவிய அரண்மனையும்; மேய் பொன் அறையும் - மேவிய பொன்னறையும்; பிறவும் எல்லாம் - பிற இடங்களும் ஆகிய எல்லாவற்றையும்; விரைந்து ஆய்ந்த பின்றை - விரைவாக ஆராய்ந்து காவலிட்டபின்; பொன் கமல மகள் கைதொழச் சேய் சென்று புக்கான் - சிவந்த பொற்றாமரையில் வாழும் திருமகள் வணங்க முருகனனையான் அக் கோயிலுட் புகுந்தான்.
|
|
(வி - ம்.) கடிகை - துணித்தது; என்றது பொன்போர்த்த மூங்கிற் குழாயை.
|
|
புரிசைக் கோயில், அணியார் கோயில், அகன் கோயில் என இயைக்க. கடிகை - துண்டம். கடிகைக்கைவிளக்கு, கதிர்க் கைவிளக்கு என இயைக்க. பொன்னறை - கருவூலம். சேய் : உவமவாகுபெயர்; சீவகன். கமலமகள் - திருமகள்.
|
( 24 ) |
| 2351 |
முலையீன்ற பெண்ணைத் திரடாமங்க | |
டாழ்ந்து முற்று | |
மலையீன்ற மஞ்சின் மணிப்பூம்புகை | |
மல்கி விம்மக் | |
கலையீன்ற சொல்லார் கமழ்பூவணைக் | |
காவல் கொண்டார் | |
கொலையீன்ற வேற்கண் ணவர்கூடிய | |
மார்பற் கன்றே. | |
|
|
(இ - ள்.) முலை ஈன்ற பெண்ணைத் திரள் தாமங்கள் தாழ்ந்து - முலைபோலுங் காயை யீன்ற பனை போலுந் திரண்ட மாலைகள் தாழ; முற்றும் மலை ஈன்ற மஞ்சின் மணிப் பூம்புகை மல்கி விம்ம - மாடமெங்கும் மலை தந்த முகில்போல அழகிய புகை நிறைந்து புறம் போக; கொலை ஈன்ற வேல்கண்ணவர் கூடிய மார்பற்கு - கொலையை நல்கிய வேலனைய கண்ணவர் சேர்ந்த மார்பனாகிய சீவகனுக்கு; அன்றே - அப்பொழுதே; கலை ஈன்ற சொல்லார் கமழ் பூஅணை காவல் கொண்டார் - கலைகளை நல்கிய மொழி மகளிர் மணங்கமழும் மலரணைக் காவலை மேற்கொண்டனர்.
|
|
(வி - ம்.) முலைபோன்ற காயையீன்ற பெண்ணை என்க. பெண்ணை - பனை; இது தாமத்திற்குவமை. முலை பனைக்குவமமன்மையின் அடுத்து வரலுவமம் அன்றென்க. மஞ்சின் - முகில்போல.
|
( 25 ) |