பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1330 

2352 போர்க்கோல நீக்கிப் புகழ்ப்பொன்னி
  னெழுதப் பட்ட
வார்க்கோல மாலை முலையார்மண்
  ணுறுப்ப வாடி
நீர்க்கோலஞ் செய்து நிழல்விட்டுமிழ்
  மாலை மார்பன்
றார்க்கோல மான்றோ்த் தொகைமாமற்
  றொழுது சொன்னான்.

   (இ - ள்.) நிழல் விட்டு உமிழ் மாலை மார்பன் - ஒளியை வீசிச் சொரியும் முத்த மாலை அணிந்த மார்பன்; போர்க் கோலம் நீக்கி - போர்க் கோலத்தைப் போக்கி; புகழ்ப் பொன்னின் எழுதப்பட்ட வார்க் கோல மாலை முலையார் - புகழும் பொன்னாலே எழுதப்பட்ட கச்சையும் கோலத்தையும் மாலையையும் உடைய முலையார்; மண்ணுறுப்ப ஆடி - நீராட்ட ஆடி; நீர்க்கோலஞ் செய்து - அதற்குத் தக்க கோலத்தைச் செய்து; தார்க்கோலம் - தூசிப் படையின் அழகையும்; மான் தேர்த் தொகை - குதிரை பூட்டிய தேர்த்திரளையும் உடைய; மாமன் தொழுது சொன்னான் - மாமனை வணங்கிக் கூறினான்.

   (வி - ம்.) முன்னர் 2326 ஆஞ் செய்யுளிற் சீவகனை அரசர் நீராட்டியதாகப் பொருள்கூறிய நச்சினார்க்கினியர் ஈண்டுச் சீவகன் நீராடியதனைக், 'கள வேள்வி முடித்துக் களத்தினின்றும் வருதலின், பின்னும் மஞ்சனம் ஆடினான்' என்பர்.

( 26 )
2353 எண்கொண்ட ஞாட்பி னிரும்பெச்சிற்
  படுத்த மார்பர்
புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப்
  பொற்ப நோக்கிப்
பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை
  யண்ணல் போல
மண்கொண்ட வேலா னடிதைவர
  வைகி னானே.

   (இ - ள்.) எண் கொண்ட ஞாட்பின் - நினைக்கத்தக்க இப்போரிலே; இரும்பு எச்சில் படுத்த மார்பர் - படைகளாலே புண் பட்ட மார்பினரின்; புண் போற்றிக்கொண்டு புறம் செய்க என - புண்ணைப் போற்றிக்கொண்டு காத்தருளுவீராக என்று கூறி; பொற்ப நோக்கி - (தானும் அவர்களை) அன்புடன் பார்த்து (வேண்டுவன செய்து) ; மண் கொண்ட வேலான் - நிலங்காவல்