பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1331 

கொண்ட சீவகன்; பாம்பு அணை அண்ணல் போல - திருமாலைப் போல; பண்கொண்ட சொல்லார் தொழ - பண்போன்ற மொழி மகளிர் வணங்கவும்; அடி தைவர - அடிகளைத் தடவவும்; வைகினான் - துயில் கொண்டான்.

   (வி - ம்.) 'எண் கொண்ட ஞாட்பின்' என்பதற்குத் 'தேவாசுரம், இராமாயணம், மாபாரதம்என்ற போரில் வீரர் புண்படுமாறுபோல' என 'அப் போர்களோடு எண்ணுதல் கொண்ட போரில்' என்று ஆசிரியர் கூற்றாகவும் கூறலாமென்றும் நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர்.

   பலர் புண்களையும் அறிந்து பரிகரித்தாற்கோவிந்தனைக் கூறினான். செய்க: வேண்டிக் கோடற்கண் வந்த வியங்கோள். முன்னர், 'மண் கருதும் வேலான்' (சீவக. 1225) என்றதற்கேற்ப, ஈண்டு, 'மண்கொண்ட வேலான்' என்றார்.

( 27 )

வேறு

2354 வாள்க ளாலே துகைப்புண்டு
  வரைபுண் கூர்ந்த போல்வேழ
நீள்கால் விசைய நேமித்தே
  ரிமைத்தார் நிலத்திற் காண்கலாத்
தாள்வல் புரவி பண்ணவிழ்த்த
  யானை யாவித் தாங்கன்ன
கோள்வா யெஃக மிடம்படுத்த
  கொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார்.

   (இ - ள்.) வாள்களாலே துகைப்பு உண்டு வரைபுண் கூர்ந்த போல் வேழம் - வாள்களாலே வெட்டுண்டதனால், மலை புண் மிகுந்தது போன்ற யானையும்; நீள் கால் விசைய நேமித்தேர் - பெருங் காற்றைப் போலும் விரைந்து செல்லும் உருளுடைய தேரும்; இமைத்தார் நிலத்தில் காண்கலாத் தாள் வல் புரவி - கண்ணை இமைத்தவர் பின்பு நிலத்திற் காணவியலாத வலிய கால்களையுடைய புரவியும்; பண் அவிழ்த்த யானை ஆவித்தாங்கு அன்ன கோள்வாய்எஃகம் இடம்படுத்த - பண்ணவிழ்த்த யானை கொட்டாவி கொண்டாற் போன்றதாம்படி, கொலை வல்ல வாள் பிளந்த; கொழும் புண் மார்பர் - பெரும் புண்களையுடைய மார்பரும்; அயா வுயிர்த்தார் - இளைப்பாறினார்.

   (வி - ம்.) அஃறிணையும் உயர்திணையும் எண்ணிச் சிறப்பினால் 'அயாவுயிர்த்தார்' என உயர்திணை முடிபைப் பெற்றன.

( 28 )
2355 கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங்
  கூந்தன் மகளிர் குழைசிதறி
யழுவா ரழுகைக் குரலொலியு
  மதிர்கண் முரசின் முழக்கொலியுங்