| பூமகள் இலம்பகம் |
1335 |
|
|
|
(வி - ம்.) வார் - கச்சு. வடம் - முத்துவடம். பொற்பு - பொலிவு. கார்மீதாடி - மேகத்தை வென்று. கலம் - அணிகலன். கழலோன் : சீவகன்.
|
( 33 ) |
வேறு
|
| 2360 |
தொல்லை நால்வகைத் தோழருந் | |
தூமணி நெடுந்தோ் | |
மல்லற் றம்பியு மாமனு | |
மதுவிரி கமழ்தார்ச் | |
செல்வன் றாதையுஞ் செழுநக | |
ரொடுவள நாடும் | |
வல்லைத் தொக்கது வளங்கெழு | |
கோயிலு ளொருங்கே. | |
|
|
(இ - ள்.) தொல்லை நால்வகைத் தோழரும் - பழைமையான நான்கு தோழர்களும்; தூமணிநெடுந்தேர் மல்லல் தம்பியும் - தூய மணிகள் இழைத்த பெரிய தேரையுடைய வளமிகு தம்பியும்; மாமனும் - கோவிந்தனும்; கமழ்தார்ச் செல்வன் தாதையும் - மணமிகுந்தாரணிந்த சீவகனுக்குத் தந்தையான கந்துக்கடனும்; செழுநகரொடு வளநாடும் - பழைய ஊரும் வள நாடும்; வளம் கெழு கோயிலுள் - செல்வம் நிறைந்த அரண்மனையிலே; ஒருங்கே வல்லை தொக்கது ஒன்று சேர விரைந்து கூடின.
|
|
(வி - ம்.) நந்தட்டன் சிறந்தமையிற் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். பின்னரும் நபுல விபுலரைப் பேசாது விட்டதனால் அவர்கள் போரில் இறந்திருத்தல் வேண்டும். திணை விராய் எண்ணி அஃறிணையினால் முடிந்தது. 'தொக்கது' என்பதனாற் பன்மையொருமை மயக்கமுமாம்.
|
( 34 ) |
| 2361 |
துளங்கு வெண்மதி யுகுந்தவெண் | |
கதிர்தொகுத் ததுபோல் | |
விளங்கு வெள்ளியம் பெருமலை | |
யொழியலந் தெழிலார் | |
வளங்கொண் மாநகர் மழகதிர் | |
குழீஇயின போலக் | |
களங்கொண் டீண்டினர் கதிர்முடி | |
விஞ்சையர் பொலிந்தே. | |
|
|
(இ - ள்.) துளங்கு வெண்மதி உகுத்த வெண்கதிர் தொகுத்ததுபோல் - அசைவினையுடைய வெண்மதி சொரிந்த வெண் கதிரைக் குவித்த தன்மை போல; விளங்கு வெள்ளிஅம் பெருமலை ஒழிய வந்து - விளங்கும் பெரிய வெள்ளி மலையை
|