பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1336 

விட்டுவந்து; எழில் ஆர் வளங்கொள் மாநகர் மழகதிர் குழீஇயின போல - அழகிய வளமிகும் இராசமா புரத்திலே இளங்கதிர் திரண்டாற் போல; பொலிந்து கதிர்முடி விஞ்சையர் களம் கொண்டு ஈண்டினர் - பொலிவுற்று, ஒளிவீசும் முடீயணிந்த விஞ்சையர் யாவரும் இடங்கொண்டு திரண்டனர்.

   (வி - ம்.) 'ஒழிய' என்பதற்குக், 'கலுழவேகன் தங்க' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

( 35 )
2362 எண்ண மென்னினி யெழின்முடி
  யணிவது துணிமின்
கண்ண னாரொடு கடிகையும்
  வருகென வரலும்
பண்ணி னார்முடி பழிச்சிய
  மணிபொனிற் குயிற்றி
யண்ண லாய்கதி ரலமவரப்
  புலமக ணகவே.

   (இ - ள்.) இனி எண்ணம் என் ? - இனியும் நினைவுகூர்தல் ஏன் ?; எழில் முடி அணிவது துணிமின் - அழகிய முடியை அணிவதை நினைமின் (என்று முன் வந்தோர் அமைச்சரை நோக்கிக் கூற அவர்கள்); கண்ணனாரொடு கடிகையும் - புரோகிதருடன் முழுத்தம் வைப்பவனும்; அண்ணல் ஆய்கதிர் அலம் வரப்புலமகள் நக - தலைமைபெற்ற சிறந்த கதிர்கள் அசையவும் நாமகன் மகிழவும்; பழிச்சிய மணிபொனில் குயிற்றி - புகழ்ந்த மணிகளைப் பொன்னிலே அழுத்தி; முடி பண்ணினார் - மடியமைத்த வரும்; வருக என வரலும் - வருக என்றவுடன் அவர்களும் வரவும்;

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

   'இனி' யென்றார் காலங்கழிக்குமது தகாது என்றற்கு. என்றதனாலே புரோகிதன் முதலாகத் துறைதோறும் அழைக்க வேண்டுவாரை அழைத்ததும், அங்குரார்ப்பணம் அதிவாசம் முதலியசடங்குகள் யாவும் நடத்தி முழுத்தம் பார்த்திருந்ததுவும் தோன்றக் கூறினார்.

   முடியமைத்தற்குரிய நூல்கள் எல்லாம் முற்ற முடித்தலின், 'நாமகள் மகிழ' என்றார். புலமகள் நகப் புண்ணினாரும் என்க.

( 36 )
2363 விரியு மாலையன் விளங்கொளி
  முடியினன் றுளங்கித்
திருவின் மால்வரைக் குலவிய
  தனையதோர் தேந்தா