| பூமகள் இலம்பகம் |
1338 |
|
|
| 2365 |
மையல் யானையின் படுமதங் | |
கெடப்பகட் டரசன் | |
செய்த மும்மதம் போற்றிசை | |
திசைதொறுங் கமழுந் | |
தெய்வ வாசத்துத் திருநகர் | |
வாசங்கொண் டொழிய | |
வெய்யர் தோன்றினர் விசும்பிடைச் | |
சிறப்பொடும் பொலிந்தே. | |
|
|
(இ - ள்.) மையல் யானையின் படுமதம் கெட - மயக்கம் பொருந்திய யானையின் மதம் கெடுமாறு; பகட்டரசன் செய்த மும்மதம் போல் - களிற்று வேந்தன் உண்டாக்கின மதம்போல ; திசை திசைதொறும் கமழும் தெய்வ வாசத்து - எல்லாத் திசையினும் சென்று மணக்கின்ற தெய்வ மணத்தாலே; திருநகர் வாசம் கொண்டு ஒழிய - அவ்வழகிய நகரின் மணம் அடங்க; விசும்பிடைச் சிறப்பொடும் பொலிந்து - வானிலே சிறப்பொடும் பொலிவுற்று; வெய்யர் தோன்றினர் - விரைந்து தோன்றினர்.
|
|
(வி - ம்.) சிறப்பென்றார் சீவகன் மணிமுடி விழாவிற்குச் சிறப்புறக் கொண்டு வந்த பொருள்களை.
|
|
மையல் - மயக்கம். படுமதம் : வினைத்தொகை. பகட்டரசன் - யானைகட்குத் தலைவனாகிய களிறு. இதனை யூதநாதன் என்ப. வெய்யர் - விரைந்தனராய் : முற்றெச்சம்.
|
( 39 ) |
| 2366 |
வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப் | |
பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற் | |
பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டி | |
யெரிபொ னீண்முடி கவித்தனன் பலித்திரற் றொழுதே. | |
|
|
(இ - ள்.) மாநகர் மாந்தர்கள் வெருவி வியந்து கைவிதிர்ப்ப - பெருநகரிலுள்ள மக்கள் அஞ்சி வியந்து கைவிதிர்க்கும்படி; பொருஇல் பூமழை பொன் மழையொடு சொரிந்து - ஒப்பற்ற மலர்மழையைப் பொன்மழையுடன் சொரிய; பருதி போல்வன நூற்றெட்டுக் குடத்தால் ஞாயிறு போன்றனவாகிய நூற்றெட்டுக் குடங்களால்; பாற்கடல் சொரிந்து ஆட்டி - பாற்கடலிலே முகந்து ஆட்டி; பவித்திரன் தொழுது - தூய்வனாகிய சீவகனை வணங்கி; எரிபொன் நீளமுடி கலித்தனன் - ஒளிவிடும் நீண்ட பொன்முடியைக் கவித்தான்.
|
|
(வி - ம்.) 'பவித்திரன்' என்றார் நெஞ்சின் தூய்மை தோன்ற. சீவகன் மந்திரமோதி நாய்ப்பிறப்பை நீக்கிய ஆசிரியனாதலின் சுதஞ்சணன் தொழுதான்.
|
( 40 ) |