பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1342 

வேறு

2372 வார்பிணி முரச நாண
  வானதிர் முழக்க மேய்ப்பத்
தார்பிணி தாம மார்பன்
  றம்பியை முகத்து ணோக்கி
யூர்பிணி கோட்டஞ் சீப்பித்
  துறாதவ னாண்ட நாட்டைப்
பார்பிணி கறையி னீங்கப்
  படாமுர சறைவி யென்றான்.

   (இ - ள்.) தார்பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி - மாலை பிணித்த ஒளியுறு மார்பன் நந்தட்டன் முகத்தைப் பார்த்து, வார்பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்ப - வாராற் கட்டப்பட்ட முரசம் வெள்கவும், முகில் அதிரும் முழக்கம் போலவும்; ஊர்பிணி கோட்டம் சீப்பித்து - ஊரிலுள்ளாரைப் பிணித்த சிறைக்கோட்டங்களை இடிப்பித்து; உறாதவன் ஆண்ட நாட்டைப் பார்பிணி கறையின் நீங்க - நம் பகைவன் ஆண்ட நாட்டினை உலகைப் பிணிக்கும் இறையிலிருந்து விலக; படாமுரசு அறைவி என்றான் - ஓய்விலாத முரசை அறையச் செய்க என்றான்.

   (வி - ம்.) முகத்துள் : உள் உருபு மயக்கம். 'பாரிற்குக் கட்டின கடமையினின்றும் நீங்க என்றது ஆறில் ஒன்னையும் தவிர என்றவாறு. இது கடமை கொள்ளாமை என்னும் பொருட்டாய் நாட்டை, என்னும் இரண்டாவதற்கு முடிபு ஆயிற்று. ஐ : 'அசை' எனினுமாம்.

( 46 )
2373 கடவுள ரிடனுங் காசில்
  கணிபெறு நிலனுங் காமர்
தடவளர் முழங்குஞ் செந்தீ
  நான்மறை யாளர் தங்க
ளிடவிய நிலத்தோ டெல்லா
  மிழந்தவர்க் கிரட்டி யாக
வுடனவை விடுமி னென்றா
  னொளிநிலா வுமிழும் பூணான்.

   (இ - ள்.) ஒளிநிலா உமிழும் பூணான் - ஒளி நிலவைச் சொரியும் பூணினான்; கடவுளர் இடனும் - கடவுளருக்கு இறையிலியாக விட்ட நிலனும்; காசு இல் கணிபெறு நிலனும் - குற்றம் அற்ற கணிகள் பெற்ற நிலமும்; காமர் தடவளர் முழங்கும் செந்தீ நான்மறையாளர் தங்கள் இடவிய நிலத்தோடு - விருப்