| நாமகள் இலம்பகம் |
135 |
|
|
மன்னவர் காய்வன நாவினும், உரையார், சிந்தியார் - காவலையுடைய வேந்தர்கள் வெறுப்பவற்றை நாவினால் உவமை கூறும் இடத்தும் கூறார், நினைப்பதுஞ் செய்யார்.
|
( 220 ) |
| 250 |
தீண்டி னார்தமைத் தீச்சுடு மன்னர்தீ |
| |
யீண்டு தங்கிளை யோடு மெரித்திடும் |
| |
வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான் |
| |
மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே. |
|
|
(இ - ள்.) தீ தீண்டினாரைச் சுடும் - தீயானது தொட்ட வரையே சுடும்; மன்னர் தீ ஈண்டு தம் கிளையோடும் எரித்திடும் - (அங்ஙனமின்றி) அரசருடைய சீற்றத்தீ தீங்கு செய்தவரைத் திரண்ட சுற்றத்தோடும் சுட்டிடும்; வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலால் - அவரை விரும்பினார்க்கு அவரது அருள் அமிர்துபோல் நலந்தரும், வெறுத்தார்க்கு நஞ்சுபோல் மறைந்து நின்று கொல்லும், ஆதலால்; நின் வாய்மொழித் தெய்வம் மாண்டதன்று - நீ கூறிய தெய்வம் என் தெய்வம்போலச் சிறப்புடையதன்று.
|
|
|
(வி - ம்.) இதனாற் பகைவரையும் நட்டாரையும் தீநட்பையுங் கூறினான்.
|
|
|
வேண்டில்இன் அமிர்தும் (வேண்டாது பகைப்பின்) நஞ்சும் ஆதலான் என வருவித்துக்கொள்க. நினக்கு ஒரு தெய்வம் இங்ஙனம் கூறிற்றென்றல் பொய். நீயே இத் தீங்கினை நினைக்கின்றனை என்பான் 'நின் வாய்மொழித் தெய்வம்' என்றான்.
|
( 221 ) |
| 251 |
வேலின் மன்னனை விண்ணகங் காட்டியிஞ் |
| |
ஞால மாள்வது நன்றெனக் கென்றியேல் |
| |
வாலி தன்றெனக் கூறினன் வாண்ஞமற் |
| |
கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான்.. |
|
|
(இ - ள்.) வாள்ஞமற்கு ஓலை வைத்த அன்ன ஒண்திறல் ஆற்றலான் - வாள் வலியாலே நமனுக்கு 'வல்லவனாயின் வந்து பார்க்க' என்று ஓலை வைத்தாற்போன்ற திறலை நடத்துதலுடைய தருமதத்தன்; வேலின் மன்னனை விண்அகம் காட்டி - வேலினால் அரசனை விண்ணுலகுக்குச் செலுத்தி; இஞ்ஞாலம் ஆள்வது எனக்கு நன்று என்றியேல் - இவ்வுலகை ஆள்வது எனக்கு நலம் என்றனையேல்; வாலிது அன்று எனக் கூறினன் - அது நினக்கு நன்றன்று என்றுரைத்தனன்.
|
|
|
(வி - ம்.) இவன் முன்னின்று கூறிய அருமை நோக்கி, 'ஆற்றலான்' என்றார்.
|
|