| நாமகள் இலம்பகம் |
136 |
|
|
இஞ்ஞாலம் என்றது இகழ்ச்சி. வாலிது - தூயதுமாம். ஞமன் - யமன்.
|
( 222 ) |
வேறு
|
|
| 252 |
குழற்சிகைக் கோதை சூட்டிக் |
| |
கொண்டவ னிருப்ப மற்றோர் |
| |
நிழற்றிகழ் வேலி னானை |
| |
நேடிய நெடுங்க ணாளும் |
| |
பிழைப்பிலாட் புறந்தந் தானும் |
| |
குரவரைப் பேணல் செய்யா |
| |
திழுக்கினா ரிவர்கள் கண்டா |
| |
யிடும்பைநோய்க் கிரைக ளாவார் |
|
|
(இ - ள்.) குழல்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப - தன் குழலிலே அவன் சிகையிலுள்ள மாலையைக் சூட்டிக் கைப்பற்றியவன் இருப்பவும்; மற்றுஓர் நிழல்திகழ் வேலினானை நேடிய நெடுங்கணாளும் - வேறோர் ஒளிதரும் வேலுடையவனைத் தேடிய நீண்ட கண்ணினை யுடையாளும்; பிழைப்பு இலாள் புறம் தந்தானும் - குற்றம் அற்ற மனைவியை மனத்தாற் கொள்ளாது விட்டவனும்; குரவரைப் பேணல் செய்யாது இழுக்கினார் - ஐங்குரவரையும் வழிபடாமல் தவறியவர்களும் ஆகிய; இவர்கள் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார் கண்டாய் - துன்பந்தரும் நோய்களுக்கு இரையாவார்கள் காண்.
|
|
|
(வி - ம்.) [குழற்சிகை : மயிர் முடியும் ஆம்.]
|
|
|
[தந்தானும் என்பதிலுள்ள]தரவு, 'செலவினும் வரவினும்' (தொல்.கிளவி.28) என்னும் பொதுச் சூத்திரத்தால் முடிக்க. குரவர் - அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன் [தமையன்] என ஐவர்.
|
( 223 ) |
| 253 |
நட்பிடைக் குய்யம் வைத்தான் |
| |
பிறர்மனை நலத்தைச் சோ்ந்தான் |
| |
கட்டழற் காமத் தீயிற் |
| |
கன்னியைக் கலக்கி னானு |
| |
மட்டுயி ருடலந் தின்றா |
| |
னமைச்சனா யரசு கொன்றான் |
| |
குட்டநோய் நரகந் தம்முட் |
| |
குளிப்பவ ரிவர்கள் கண்டாய். |
|
|
(வி - ம்.) நட்பிடைக் குய்யம் வைத்தான் - நட்பிலே வஞ்சித்தவனும்; பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் - பிறர் மனைவி
|
|