| நாமகள் இலம்பகம் |
137 |
|
|
யின் இன்பத்தை நுகர்ந்தவனும்; கட்டுஅழல் காமத்தீயின் கன்னியைக் கலக்கினானும் - மிக்க அழல்போலும் காமத் தீயினாற் கன்னியைக் கெடுத்து, மணவாதவனும்; உயிர் அட்டு உடலம் தின்றான் - உயிரைக் கொன்று உடலைப் புசித்தவனும்;அமைச்சனாய் அரசு கொன்றான் - அமைச்சனாக இருந்து அரசனை ஒழித்தவனும் ஆகிய; இவர்கள் குட்டநோய் நரகம் தன்னுள் குளிப்பவர் கண்டாய் - இவர்கள் (இம்மையிற்) பெருநோயினும் (மறுமையில்) நரகத்தினும் அழுந்துவோர்காண்.
|
|
|
(வி - ம்.) கலக்குதல் கைக்கிளை வகையாகிய இராக்கதமென்னும் மணத்தில் தப்பியதாம்.
|
|
|
குய்யம் - வஞ்சகம். நலம் - இன்பம். உயிர் அட்டு உடலந் தின்றான் என மாறுக. குட்ட நோயும் நரகமும் ஆகிய இவற்றுள் என்க.
|
( 224 ) |
| 254 |
பிறையது வளரத் தானும் |
| |
வளர்ந்துடன் பெருகிப் பின்னாட் |
| |
குறைபடு மதியந் தேயக் |
| |
குறுமுய றேய்வ தேபோல் |
| |
இறைவனாத் தன்னை யாக்கி |
| |
யவன்வழி யொழுகி னென்று |
| |
நிறைமதி யிருளைப் போழும் |
| |
நெடும்புகழ் விளைக்கு மென்றான். |
|
|
(இ - ள்.) பிறைவளர அது தானும் வளர்ந்து உடன்பெருகி - பிறை வளரும்போது குறுமுயலும் வளர்ந்து பெருத்து; பின் நாள் குறைபடும் மதியம்தேயக் குறுமுயல் தேய்வதேபோல் - பின்னர்க் குறைதலுண்டான திங்கள் தேய அதனுடன் அச் சிறுமுயலும் தேய்வதைப்போல; தன்னை இறைவன்ஆ ஆக்கியவன் வழிஒழுகின் - தன்னை அரசனாக ஆக்கியவன் வழியிலே அவனொடும் பெருகி அவனொடுந் தேய்ந்து நடப்பானானால்; என்றும் நிறைமதி யிருளைப் போழும் நெடும்புகழ் விளைக்கும் என்றான் - எப்போதும் முழுமதி இருளை நீக்குவதைப் போலப் பழியை நீக்கிப் புகழை விளைவிக்கும் என்றான்.
|
|
|
(வி - ம்.) பிறை வளர அதுதானும் வளர்ந்து என மாறுக. அது என்றது குறுமுயலை. செய்யுளாகலின் சுட்டு முன்வந்தது. பிறை வளர்பக்கத்துத் திங்கள். மதி - தேய்பக்கத்துத் திங்கள். இவ்வேற்றுமை தோன்ற பிறை வளர என்றும் மதிதேய என்றும் ஓதினார். இறைவனா என்புழி ஆக்கச்சொல்லின் ஈற்றுக் ககரம் கெட்டது.
|
( 225 ) |