| முத்தி இலம்பகம் |
1378 |
|
|
| 2442 |
மாமணி முகடு வேய்ந்த | |
| |
மரகத மணிச்செப் பன்ன | |
| |
தூமணி முலைக டம்மைத் | |
| |
தொழுதகக் கமழுஞ் சாந்திற் | |
| |
காமரு காம வல்லிக் | |
| |
கொடிகவின் கொண்டு பூத்துத் | |
| |
தூமணிக் கொழுந்து மென்றோட் | |
| |
டுயல்வர வெழுதி னாளே. | |
|
|
(இ - ள்.) மாமணி முகடு வேய்ந்த - சிறந்த மணிகளை உச்சியிலே அணிந்த; மரகத மணிச்செப்பு அன்ன - மரகதத்தை அழுத்திய மாணிக்கச் செப்பு போன்ற; தூமணி முலைகள் தம்மை - தூய மணிகளை அணிந்த முலைகளை; தொழுதகக் கமழும் சாந்தின் - தொழத் தகுமாறு மணக்கும் சாந்தினாலே; காமரு காம வல்லிக்கொடி கவின் கொண்டு பூத்து - விரப்பூட்டும் காமவல்லியாகிய கொடி அழகு கொண்டு மலர்ந்து; தூமணிக் கொழுந்து மென்தோள் துயல்வர எழுதினாள் - தூய அழகிய கொழுந்து மெல்லிய தோளிலே அசையும்படி எழுதினாள்.
|
|
(வி - ம்.) மாமணி : அணிகலன். மரகதம் - முலைக்கண்ணுக்கும் மணிச் செப்பு - முலைக்கும் உவமை. நச்சினார்க்கினியர், 'மரகதமணியைத் தலையிலே அழுத்திய பெரிய பவழச் செப்பு. இவள் நிறம் பவழத்தின் நிறமென்றார் பலவிடத்தும்' என்பர்.
|
( 65 ) |
| 2443 |
நாண்சுமக் கலாத நங்கை | |
| |
நகைமின்னு நுசுப்பு நோவப் | |
| |
பூண்சுமக் கலாத பொன்ஞாண் | |
| |
வடத்தொடு புரள நோக்கிப் | |
| |
பாண்குலாய் வண்டு பாடும் | |
| |
படுகணை மறந்து காமன் | |
| |
காண்கிலேன் கடிய வென்னா | |
| |
வுருகிமெய் கரந்திட் டானே. | |
|
|
(இ - ள்.) சுமக்கலாத நாண் நங்கை - பிறராற் சுமக்க லாகாத நாணினையுடைய நங்கையின்; நகை மின்னு நுசுப்பு நோவ - ஒளிதரும் மின்போன்ற இடை வருந்த; சுமக்கலாகாத பூண் பொன்ஞாண் வடத்தொடு புரள - சுமக்கவியலாத பூணும் பொன் நாணும் முத்து வடமும் புரளுமாறு அணிய; காமன் நோக்கி - அதனைக் காமன் பார்த்து; பாண்குலாய் வண்டு பாடும
|