முத்தி இலம்பகம் |
1380 |
|
|
2445 |
நடைச்சிறு பாதங் கோல | |
|
மணிவிர லணிந்து நாகத் | |
|
துடைச்சிறு நாவிற் றோகை | |
|
யிரீஇயினண் மாலை சோ்ந்தாள். | |
|
(இ - ள்.) புடைக் கிம்புரி இடைச்செறி குறங்கு கௌவி இளக - ஒருகூறு கிம்புரி வடிவான குறங்கு செறி என்னும் அணி குறங்கைக் கௌவி நெகிழவும்; சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - சிறுகணைக் காலைப் பற்றியவாறு கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்பவும்; நடைச் சிறுபாதம் அணிவிரல் கோலம் அணிந்து - நடைக்குரிய சிற்றடியிலும் அழகிய விரலிலும் அணிவனவற்றையும் அணிந்து, நாகத்துடை சிறு நாவின் தோகை இரீஇயினள் - பாம்பினது சிறு நாவைப்போலும் முன்தானையை விலாசி இருத்திவிட்டான்; மாலை சேர்ந்தாள் - பிறகு அலங்கார மாலை வந்தாள்.
|
(வி - ம்.) குறங்குசெறி - துடையில் அணியும் ஓரணிகலன். குறங்கு - துடை. கிம்புரி இடைச்செறி என மாறுக. நாகத்தடை - நாகத்தினுடைய. தோகை - முன்றானை : உவமவாகுபெயர், இரீஇயினாள் - வைத்தாள். மாலை - அலங்காரமாலை; தோழி.
|
( 68 ) |
2446 |
அம்மல ரடியுங் கையு | |
|
மணிகிளர் பவழ வாயுஞ் | |
|
செம்மலர் நுதலு நாவுந் | |
|
திருந்தொளி யுகிரோ டங்கேழ் | |
|
விம்மிதப் பட்டு வீழ | |
|
வலத்தக மெழுதி யிட்டா | |
|
ளம்மலர்க் கண்ட முள்ளிட் | |
|
டரிவையைத் தெரிவை தானே. | |
|
(இ - ள்.) அரிவையை - இலக்கணையை; அம் மலர்க் கண்டம் உள்ளிட்டு - அழகிய மலர்மாலை அணிந்த கழுத்தை யுள்ளிட்டு; அம் மலர் அடியும் கையும் அணிகிளர் பவழ வாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு - மலரனைய அடியும் கையும் அழகிய பவழமனைய வாயும் மாலை அணிந்த நெற்றியும் நாவும் அழகிய ஒளியையுடைய நகத்துடன்; விம்மிதப் பட்டு வீழ அம்கேழ் அலத்தகம் எழுதியிட்டான் - வியப்புற்று விரும்புபடி ஒளியுடைய செந்நிறத்தை எழுதினாள்.
|
(வி - ம்.) இக் கோலம் பிற்காலத்தில் வழங்கப் பெறாதாயிற் றென்பர்.
|