முத்தி இலம்பகம் |
1395 |
|
|
(இ - ள்.) துளும்பும் மேகலை - ஒளி ததும்பும் மணிமேகலையையும்; கழித்த வேல் இரண்டு கண்ட அனைய கண்ணினார் - உறை கழித்த இரண்டு வேல் போன்ற கண்களையுமுடைய மகளிர்; விழுத்தகு மணிச் செவி - சிறப்புற்ற மணியாற் செய்த காதினையும்; வெண் பொன் கைவினை - வெள்ளியாற் செய்த தொழிற் பாட்டையும் உடைய; எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும் தொழில்பட வைத்தனர் - அழகினால் விளங்குகின்ற படிக்கத்தை (இருவர்க்கும்) தொழிற்பட இரண்டு பக்கமும் வைத்தனர்.
|
(வி - ம்.) செவி - படிக்கத்தின் உறுப்பு. வெண்பொன் - வெள்ளி. படியகம் - படிக்கம். இருவர்க்கும் தொழிற்பட என்க. துளும்பும் - அசையும். உறைகழித்த வேலென்க.
|
( 95 ) |
வேறு
|
2473 |
அங்கருங் காலி சீவி | |
|
யூறவைத் தமைக்கப் பட்ட | |
|
செங்களி விராய காயுஞ் | |
|
செம்பழுக் காயுந் தீந்தே | |
|
னெங்கணுங் குளிர்த்த வின்னீ | |
|
ரிளம்பசுங் காயு மூன்றுந் | |
|
தங்களி செய்யக் கூட்டித் | |
|
தையலார் கைசெய் தாரே. | |
|
(இ - ள்.) அம் கருங்காலி சீவி - அழகிய கருங்காலி மரத்தைச் சீவி; ஊற வைத்து அமைக்கப்பட்ட - ஊற வைத்துக் காய்ச்சிய; செங்களி விராய காயும் செம்பழுக் காயும் - செங்களியைக் கலந்த காயும் பழுக்காயும்; தீதேன் எங்கணும் குளிர்த்த இன்நீர் இளம் பசுங்காயும் - இனிய தேன் போலே மெய்ம் முழுதும் குளிரச் செய்த இனிய இயல்பையுடைய இளம் பசுங்காயும் ஆகிய; மூன்றும் - இம் மூன்றையும்; தம் களி செய்யக் கூட்டி - தமக்கு இயல்பாகிய களிப்பைச் செய்யும் முறையில் கூட்டி; தையலார் கை செய்தார் - பெண்கள் கலந்தனர்.
|
(வி - ம்.) கருங்காலி - ஒருவகை மரம். செங்களி - சிவந்த குழம்பு. காய் - ஈண்டுக் களிப்பாக்கு. பழுக்காய் - முதிர்ந்த பாக்கு. பசுங்காய் - பச்சைப்பாக்கு. கைசெய்தல் - கலத்தல்.
|
( 96 ) |
2474 |
கைசெய்து கமழு நூறுங் | |
|
காழ்க்கும்வெள் ளிலையுங் காம | |
|
மெய்தநன் குணர்ந்த நீரா | |
|
ரின்முக வாச மூட்டிப் | |
|