| முத்தி இலம்பகம் | 
1398  | 
 | 
  | 
| 
 கோதை - இனிய தேனை நிரம்பவுண்டு பண்பாடுதற் கிடமான கோதையினையுடைய இலக்கணை; பூ கொய்து துவண்ட கொம்பின் பொற்பினள் ஆயினாள் - தன்பாலுள்ள மலர்கள் கொய்யப்பட்டுத் துவண்டுபோன தொரு பூங்கொம்பின் தன்மையை உடையளாயினாள். 
 | 
| 
    (வி - ம்.) இதனால் இருவர் புணர்ச்சியும் கூறினார். தோக்கை - கொய்சகம். இடுகொடி - வினைத்தொகை. மார்பில் வரைந்திட்ட பூங்கொடி என்க. ஆடவர் மார்பில் பூங்கொடி வரையும் வழக்கத்தை, ”ஆடுகொடி அணிந்த வுயர் அலங்கல் வரை மார்பன்” (2483) என்பதனானும் உணர்க. இடுகொடியை முலைக்கு அடையாக்குவர் நச்சினார்க்கினியர். பொருது என்னுந் தொழில்பற்றி யானை எனவும் மலை எனவும் உரைத்துக்கொள்க. 
 | 
( 100 ) | 
|  2478 | 
அணித்தகு பவள மேற்பக் |   |  
|   | 
  கடைந்துமுத் தழுத்தி யம்பொன் |   |  
|   | 
றுணித்தடி விளிம்பு சோ்த்தித் |   |  
|   | 
  தொழுதகச் செய்த வண்கை |   |  
|   | 
மணிச்சிரற் சிறகு நாண |   |  
|   | 
  வகுத்தசாந் தால வட்டம் |   |  
|   | 
பணித்தகு மகளிர் வீசிப் |   |  
|   | 
  பாவையைக் குளிர்ப்பித் தாரே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அணித்தகு பவளம் ஏற்பக் கடைந்து - அழகிய பவளத்தை இயல்புறக் கடைந்து; முத்தழுத்தி - அடியிலே முத்தை அழுத்தி; தொழுதகச் செய்த வண்கை - தொழுதல் பொருந்தச் செய்த காம்பினையுடைய; அம்பொன் துணித்து விளிம்பு சேர்த்தி - அழகிய பொன்னை நறுக்கி, விளிம்பிலே சேர்த்துப் பீலியிட்ட; மணிச் சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆலவட்டம் - சிச்சிலியின் சிறகு நாணச் செய்த சந்தன ஆலவட்டத்தாலே; பணித்தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித்தார் - வீசுதற் றொழிலுக்குத் தக்க மகளிர் வீசி இலக்கணையைக் குளிர்ப்பித்தனர். 
 | 
| 
    (வி - ம்.) அணித்தகு - அழகிய. ஏற்ப - பொருந்தும்படி. தொழு - தொழுதல். வண்கை - வளப்பமுடைய கைப்பிடி. மணிச்சிரல் - அழகிய சிச்சிலிப் பறவை. சாந்தாலவட்டம் - ஒருவகை விசிறி. பணித்தொழிலிலே தகுதிபெற்ற மகளிர் என்றவாறு. பாவை : இலக்கணை. 
 | 
( 101 ) | 
|  2479 | 
சேந்து நீண்ட செழுந்தாமரைக் கண்களி |   |  
|   | 
னேந்தி மாண்ட முலைக்கண்களி னெழுதிச் |   |  
|   | 
சாந்த மாக மெழுதித்தகை மாமல |   |  
|   | 
ராய்ந்து சூட்டி யவனஞ்சலி செய்தான். |   | 
 
 
 |