| முத்தி இலம்பகம் | 
1404  | 
 | 
  | 
| 
 ளுடன் புத்தொளி வீசி அமர்ந்திருந்ததைப்போல; வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமான் - வானிலே உயர்ந்தோங்கிய குடையையுடைய அரசர் பெருமான்; வேல் நிரைசெய் கண்ணியொடு மெல்லென இருந்தான் - வேலென ஒழுங்குறுங் கண்ணியோடு அமைந்திருந்தான். 
 | 
| 
    (வி - ம்.) செய் : உவமைச் சொல். நொய்ய - மெத்தென்ற. தான் - அசை. இரவி - ஞாயிறு. இது சீவகனுக்குவமை. திங்கள் - இலக்கணைக்குவமை - கண்ணி : இலக்கணை. மன்னர் பெருமான் : சீவகன். 
 | 
( 113 ) | 
வேறு
 | 
|  2491 | 
குளநென் முன்றிற்கனி தேன்சொரி |   |  
|   | 
  சோலைக் குளிர்மணி |   |  
|   | 
வளமை மல்கியெரி யம்மட |   |  
|   | 
  மந்திகை காய்த்துவா |   |  
|   | 
னிளமை யாடியிருக் கும்வனத் |   |  
|   | 
  தீர்ஞ்சடை மாமுனி |   |  
|   | 
கிளையை நீங்கிக்கிளர் சாபத்தி |   |  
|   | 
  னாவித னாயினான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) குளநெல் முன்றில் - குளநெல் உணங்கும் முன்றிலிலே; கனி தேன் சொரி சோலை - கனி தேனைப் பொழியும் சோலையினிடத்தே; குளிர் மணி வளமை மல்கி எரிய - தண்ணிய மணிகள் வளம் நிறைந்து ஒளிசெய்; மடமந்தி கை காய்த்துவான் - இளமந்தி (அதனைத் தீயென எண்ணி) கையைக் காய்ச்சுதற்கு; இளமை ஆடியிருக்கும் வனத்து - இளமை யாடி இருக்கும் வனத்திலுள்ள; ஈர்ஞ்சடை மாமுனி - தண்ணிய சடையையுடைய முனியொருவன் (தன்னை ஒருவன் சபித்தலின்); கிளையை நீங்கி - சுற்றத்தை நீங்கி; கிளர் சாபத்தின் - வந்து; தோன்றின சாபத்தாலே; நாவிதன் ஆயினான் - நாவிதன் ஆனான். 
 | 
| 
    (வி - ம்.) இளமையாடுதல் : ஒன்றை மற்றொன்றாக எண்ணி மயங்குதல். 
 | 
| 
    குளநெல் - ஒருவகை நெல். குளநெல் உணங்கும் முன்றில் என்க. எரியம்மடமந்தி என்புழி வண்ண நோக்கி மகரவொற்று விரிந்து நின்றது. காய்த்துவான் : வினையெச்சம். நாவிதன் - மயிர்வினைஞன். 
 | 
( 114 ) | 
|  2492 | 
ஆய்ந்த கேள்வி யவன்கான் |   |  
|   | 
  முளையாய்வழித் தோன்றினான் |   |  
|   | 
றோய்ந்த கேள்வித் துறைபோ |   |  
|   | 
  யலங்காரமுந் தோற்றினான். |   | 
 
 
 |