பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1420 

2517 லருநிறக் குருசின் மார்பத்
  தசைந்தன ளலங்கல் வேலு
நெரிபுறத் தடற்று வாளு
  நீலமு நிகர்த்த கண்ணாள்.

   (இ - ள்.) அலங்கல் வேலும் நெரிபுறத் தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள் - அலங்கலையுடைய வேலையும் சருச்சரைப்பட்ட புறத்தையுடைய உறையிலிருக்கும் வாளையும் நீல மலரையும் போன்ற கண்ணாள்; திருநிறக் காம வல்லி - அழகிய நிறமுடைய காமவல்லி; திருக்கவின கொண்டு பூத்து - திருவின் அழகைக் கொண்டு மலர்ந்து; பெருநிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததேபோல் - நன்னிறத்துடன் அழகுற்ற நிறைந்த கற்பகத்தைப் பிணைந்ததைப் போல; அருநிறக் குரிசில் மார்பத்து அசைந்தனள் - அரிய நிறமுடைய சீவகன் மார்பிலே அசைத் தானே துயின்றாள்.

   (வி - ம்.) 'நெரிவுற்ற தடத்து வாழும்' என்ற பாடத்திற்கு, 'நெரிவுற்ற நீலம்' எனப் பொருள் கூறுக; வலிய அலர்த்தின நீலம் எனல் வேண்டும்.

( 140 )

வேறு

2518 மணிக்கண் மாமயிற் சாயன் மாதரு
மணிக்கந் தன்னதோ ளரச சீயமும்
பிணித்த காதலாற் பின்னிச் செல்வழிக்
கணித்த நாள்களேழ் கழிந்த காலையே.

   (இ - ள்.) மணிக்கண் மாமயில் சாயல் மாதரும் - நீலமணிக் கண்களையுடைய மயிலனைய சாயலையுடைய இலக்கணையும்; அணிக்கந்து அன்னதோள் அரச சீயமும் - அழகிய தூண் போன்ற தோளையுடைய, மன்னர்க்குச் சிங்கம் போன்ற சீவகனும்; பிணித்த காதலால் பின்னிச் செல்வுழி - யாப்புற்ற காதலாலே பிணைந்து செல்கையில்; கணித்த நாள்கள் ஏழ்கழிந்த காலை - அறுதியிட்ட நாட்கள் ஏழுங்கழிந்த எட்டாம் நாளிலே,

   (வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.

   மணி - நீலமணி. கண் - புள்ளி. மாதர் : இலக்கணை. அணிக்கந்து - அழகிய தூண். சீயம் - சிங்கம்; என்றது சீவகனை. கணித்த - குறிக்கப்பட்ட. ஏழும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது.

( 141 )
2519 சூட்டுஞ் சுண்ணமு மணிந்து சுந்தர
மோட்டி யொண்பொனூ லோங்கு தாரொடு
பூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்தபின்
மோட்டு முத்தொளிர் வடம்வ ளாயினார்.