|
(இ - ள்.) இரும்பிடி நூறு சூழ இறுவரை நின்றதே போல் - கரிய பிடிகள் நூறு சூழ, பெரிய மலை நின்றதைப்போல; கரும்பொடு காய்நெல் துற்றி - கரும்பையும் காய்த்த நெல்லையும் உண்டு; கருப்புரக் கந்தில் நின்ற - கருப்பூரம் அணிந்த தூணிலே கட்டப்பட்டு நின்ற; சுரும்புசூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை - வண்டுகள் மொய்க்கும் மதத்தையுடைய சூளாமணி என்னப்படும் முகபட்டத்தையுடைய யானையை; பெருந்தகைப் பிணையல் மன்னர் முடிமிதித்து ஏறினான் - பெருமை சான்ற மாலையணிந்த மன்னரின் முடியிலே காலை வைத்து எறினான்.
|