முத்தி இலம்பகம் |
1428 |
|
|
(இ - ள்.) அணி நிலா வீசும் மாலை அரங்கு புல்லெனப் போகி - தாம் ஆடுகின்ற அழகிய நிலவு வீசும் மாலையையுடைய அரங்கு வறிதாகச் சென்று; துணி நிலா வீசும் மாலை பிறை நுதல் தோழி சேர்ந்து - தெளிந்த ஒளியை வீசும் மாலைப் பிறையனைய நெற்றியை யுடைய தோழியைத் தழுவியவாறு; நிலா வீசும் மணி மாலை மங்கையர் மயங்கி நின்றார் - ஒளிவீசும் மணிமாலை யணிந்த மங்கையர் மயங்கி நின்றனர்; பணி - (பிறகொடிகள்) தாழ்தற்குரியவான; நிலா வீசும் பைம்பொன் கொடி - ஒளி யுமிழும் பைம் பொன்னாலாகிய கொடி; மணி மலர்ந்தது ஒத்தார் - மணிகளை மலர்ந்தாற் போன்றார்.
|
(வி - ம்.) 'பணி கொடி' என்க. பணி - பரத்தலுமாம். இது சிறிது வேட்கை பிறந்து மயங்கியவர்களைக் குறிக்கின்றது.
|
( 154 ) |
2532 |
வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை நோக்கி னாரை | |
|
யுள்ளுயி ருண்ணுங் கூற்றி னுடன்றுகண் கரிந்து பொங்கக் | |
|
கள்ளுயி ருண்ணு மாலைக் கதுப்பொரு கையி னேந்தி | |
|
நள்ளிருள் விளக்கிட் டன்ன நங்கைமார் மல்கி னாரே. | |
|
(இ - ள்.) வள் உகிர் வரித்த சாந்தின் வனமுலை - கூரிய நகத்தாலே எழுதின சாந்தையுடைய அழகிய முலைகள்; நோக்கினாரை உள் உயிர் உண்ணும் கூற்றின் - தம்மைப் பார்த்தவரை உயிருண்ணும் கூற்றுக்களைப்போல; உடன்று கண் கரிந்து பொங்க - சினந்து கண் கருகிப் பொங்க; மாலைக்கள் உயிர் உண்ணும் கதுப்பு ஒரு கையில் ஏந்தி - மாலையிலுள்ள தேனின் உயிரைப் பருகும் (குலைந்த) கூந்தலை ஒரு கையிலே ஏந்தி; நள் இருள் விளக்கிட்ட அன்ன - நள்ளிருளிலே விளக்கிட்டாற் போன்று; நங்கைமார் மல்கினார் - நங்கையர் நிறைந்தனர்.
|
(வி - ம்.) சிவத்தலும் கருகலும் சினத்தின் குறிகள். கதுப்பையேந்துதலின் இருளிலே விளக்கிட்டாற் போன்றனர்; 'செறிந்த இருளுக்கு விளக்கிட்டாற் போலும் நங்கையர்' எனினும் ஆம். இதுமுதலாக வேட்கை மிக்காரைக் கூறுகின்றார்.
|
( 155 ) |
2533 |
மட்டொளித் துண்ணு மாந்தர் | |
|
மாண்புபோன் மறைந்து வண்ணப் | |
|
பட்டொளித் தொழிய வல்குற் | |
|
பசுங்கதிர்க் கலாபந் தோன்றக் | |
|
குட்டநீர்க் குவளைக் கண்கள் | |
|
விருந்துண விரும்பி நின்றா | |
|
ரட்டுந்தே னணிந்த மாலைப் | |
|
பவளக்கொம் பணிந்த தொத்தார். | |
|