| முத்தி இலம்பகம் |
1437 |
|
|
|
(இ - ள்.) சுண்ணம் மேல் சொரிவார் - சுண்ணப் பொடியை அரசன் மேலே வீசுவார்; தொங்கல் தொழுது வீழ்ப்பார் - மாலையைத் தொழுது வீழ்த்துவார்; தண் என் சந்தன நீர் ஆர்ந்து - குளிர்ந்த சந்தனமும் பனிநீரும் நிறைந்து; தேன் துளும்பும் வண்ணப் பந்து எறிவார் - தேன் ததும்பும் அழகிய மலர்ப்பந்தை வீசுவார்; வளைஒலிப்ப ஓச்சி - வளையல்கள் ஒலிக்க வீசி; கண்ணி இட்டு எறிவார் - மலர்க்கண்ணியை எறிவார்கள்; கலவை நீர் தெளிப்பார் - பசுங் கூட்டையும் பனி நீரையும் கூட்டித் துருத்தி முதலியவற்றால் தெளிப்பாராயினார்.
|
|
(வி - ம்.) தொங்கல் - மலர்மாலை. தண்ணென் : குறிப்பு மொழி, ஆர்ந்து - நிறைந்து; நிறையப்பட்டு என்க. கண்ணி - ஒருவகை மாலை. இட்டெறிவார் : ஒருசொல். கலவை நீர் பல்வேறு நறுமணமுங் கலந்த நீர்.
|
( 170 ) |
| 2548 |
முந்துசூர் தடிந்த முருகனம்பி யென்பா | |
| |
ரைந்துருவ வம்பி னநங்கனென் றயர்வார் | |
| |
கந்துகன் வளர்த்த சிங்கங்காண்மி னென்பார் | |
| |
சிந்தையிற் களிப்பார் சேணெடிய கண்ணார். | |
|
|
(இ - ள்.) சேண் நெடிய கண்ணார் - மிகவும் நீண்ட கண்ணினரான மகளிர், நம்பி முந்து சூர் தடிந்த முருகன் என்பார் - இந் நம்பி முன்னர்ச் சூரனை வீழ்த்திய முருகன் என்பார்; ஐந்து உருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார் - ஐந்து அழகிய அம்புகளையுடைய காமனே இவன் என்று வருந்துவார்; கந்துகன் வளர்த்த சிங்கம் காண்மின் என்பார் - கந்துக்கடன் வளர்த்த சிங்கம் போன்றவனைக் காணுங்கோள் என்பார்; சிந்தையில் களிப்பார் - மன மகிழ்வு கொள்வார்.
|
|
(வி - ம்.) முந்து என்றது பண்டைக்காலத்தே என்றவாறு. சூர் - சூரபன்மா. இந் நம்பி முருகன் என்பார் என மாறுக. நம்பி : சீவகன். ஐந்தம்பு உருவ அம்பு என இயைக்க. மலரம்பு என்பது தோன்ற உருவ அம்பு என்றார். அநங்கன் - காமன்; உருவமில்லாதவன் என்னும் பொருட்டு. சேண்நெடிய - மிக நீண்ட என்க.
|
( 171 ) |
| 2549 |
தேசிக முடியுந் திருந்துபட் டுடையும் | |
| |
பாசமாக நின்று பன்மலர்க் கழுநீர் | |
| |
மூசிவண் டிமிரும் மொய்யலங்க றாழக் | |
| |
காசில் காமஞ்செப்பிக் கண்ணினா லிரப்பார். | |
|
|
(இ - ள்.) தேசிக முடியும் திருந்து பட்டு உடையும் - (சீவகனுடைய) ஒளி தவழும் முடியும் விளங்கும் பட்டாடையும்; பாசம் ஆக நின்று - (தம்மைப் போகாமற்) பிணிக்கும் கயிறு
|