|
முத்தி இலம்பகம் |
1438 |
|
|
|
என்று கருதி நின்று; வண்டு மூசி இமிரும் பல் மலர்க் கழுநீர் மொய் அலங்கல் தாழ - வண்டுகள் மொய்த்து முரலும் பல கழுநீர் மலர்களால் ஆன மாலை தாழ; காசு இல் காமம் கண்ணினான் செப்பி - தம் குற்றமற்ற காமத்தைக் கண்களாற் கூறி; இரப்பார் - வேண்டுவார் சில மகளிர்.
|
|
|
(வி - ம்.) தேசிகம் - ஒளி. பாசம் - கயிறு. பல் கழுநீர் மலர் என்க. கழுநீர் மலர் அலங்கல் வண்டிமிரும் மொய்யலங்கல் என இயைக்க. காசு - குற்றம்.
|
( 172 )
|
|
|
| 2550 |
வண்டறைந்த தாரான் வண்ணங்கண்ட பின்றைக் | |
| |
கண்டிலேனென் மாமை கைவளையொ டென்பா | |
| |
ரொண்டொடி யிவன்றன் னுருவுகண்டு வாழ்வார் | |
| |
பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர்போத வென்பார். | |
|
|
(இ - ள்.) வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றை - வண்டுகள் இசைக்கும் மாலையானின் அழகைக் கண்ட பிறகு; என் மாமை கைவளையோடு கண்டிலேன் என்பார் - என் மாமையையும் கைவளையையும் காண்கிலேன் என்பார் சில மகளிர்; ஒண்டொடி - ஒள்ளிய வளையலையுடையாய்!; இவன்தன் உருவு கண்டு வாழ்வார் - இவனுடைய உருவத்தைக் கண்டு வாழ்வாராகி; பெண்டிராய்ப் பிறந்தார் - பெண்களாய்ப் பிறந்தவர்கள்; போதப்பெரியர் என்பார் - மிகவும் மேன்மையுடையோர் என்பார் சில மகளிர்.
|
|
|
(வி - ம்.) உருவுகண்டு வாழும் பெண்டிர் பெரியர் எனவே, யாமும் பெரியம் என்றாராம். மற்றும், உருவு கண்டு வாழ்வார் பெரியர் எனவே நுகரும் மகளிர் தவத்தால் மிகப் பெரியரென்றும் அத்தகைய தவத்தை யாமும் செய்தல் வேண்டும் எனவும் கூறினாராயிற்று.
|
( 173 )
|
|
வேறு |
|
|
|
| 2551 |
கொழித்திரை யோத வேலிக் | |
| |
குமரனைப் பயந்த நங்கை | |
| |
விழுத்தவ முலக மெல்லாம் | |
| |
விளக்கிநின் றிட்ட தென்பார் | |
| |
பிழிப்பொலி கோதை போலாம் | |
| |
பெண்டிரிற் பெரிய ணோற்றாள் | |
| |
கழித்துநின் றறாத கற்பிற் | |
| |
சுநந்தையே யாக வென்பார். | |
|
|
(இ - ள்.) கொழித்து இரை ஓத வேலி - முத்து முதலியவற்றைக் கொழித்து ஆரவரிக்கும் கடல் சூழ்ந்த உலகிலே;
|
|