| முத்தி இலம்பகம் | 
1439  | 
 | 
  | 
| 
 குமரனைப் பயந்த நங்கை விழுத்தவம் - சீவகனைப் பெற்ற விசயையின் சிறந்த தவம்; உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார் - உலகமெங்கும் விளக்கி நிலைபெற்றது என்பர் சில மங்கையர்; பிழிப்பொலி கோதைபோலாம் பெண்டிரில் பெரியன ஆக நோற்றாள் - தேன்பிழியையுடைய கோதையைப் போன்ற பெண்களிற் பெரியளாக நோற்றவள்; சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே என்பார் - நிலையாக நின்று நீங்காத கற்பினை யுடைய சுநந்தையே என்பார். 
 | 
| 
    (வி - ம்.) சுழித்தல் வேறிடத்தின்றி நிற்றல். அறாத கற்பு - அருட் கற்பு. 
 | 
| 
    ஓதவேலி : அன்மொழித்தொகை : உலகம். குமரன் : சீவகன். பயந்த நங்கை என்றது விசயையை. பிழி - தேன். பெரியளாக நோற்றவள் என்க. 
 | 
( 174 ) | 
|  2552 | 
சாந்தகங் கிழிய மாலைத் |   |  
|   | 
  தடமுலை ஞெமுங்கப் புல்லிச் |   |  
|   | 
சோ்ந்தெழு நங்கை மாரே |   |  
|   | 
  திருநங்கை மார்க ளல்லார் |   |  
|   | 
கூந்தலு முலையு முத்துங் |   |  
|   | 
  கோதையுஞ் சுமந்து நைவான் |   |  
|   | 
போந்தவந் நங்கை மார்கள் |   |  
|   | 
  பொய்ந்நங்கை மார்க ளென்பார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) சாந்து அகம்கிழிய மாலைத் தடமுலை ஞெமுங்கப் புல்லி - சாந்தை அணிந்த மார்பு கிழியும்படி மாலையணிந்த பெரிய முலைகள் அழுந்தத் தழுவி; சேர்ந்து எழும் நங்கைமாரே திரு நங்கைமார்கள் - கலந்து எழுகின்ற மாதர்களே நல்வினை செய்த மாதர்கள்; அல்லார் - மற்றைய மாதர்கள்; கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான் - கூந்தலையும் முலைகளையும் முத்தையும் மாலையையும் சுமந்து வருந்த; போந்த அந் நங்கைமார்கள் பொய்ந் நங்கைமார்கள் என்பார் - பிறந்த அம் மாதர்கள் பொய்யான மாதர்கள் என்றுரைப்பர். 
 | 
| 
    (வி - ம்.) வடிவு மாத்திரையாய்ப் பயன் பெறாமையின், 'பொய்ந் நங்கைமார்கள்' என்றார். அகம் : ஆகம் என்பதன் விகாரம். 
 | 
( 175 ) | 
|  2553 | 
இடம்பட வகன்று நீண்ட |   |  
|   | 
  விருமலர்த் தடங்க ணென்னுங் |   |  
|   | 
குடங்கையி னொண்டு கொண்டு |   |  
|   | 
  பருகுவார் குவளைக் கொம்பி |   | 
 
 
 |