பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1440 

2553 னுடம்பெலாங் கண்க ளாயி
  னொருவர்க்கு மின்றி யேற்ப
வடங்கவாய் வைத்திட் டாரப்
  பருகியிட் டீமி னென்பார்.

   (இ - ள்.) இடம்பட அகன்று நீண்ட இரு மலர்த் தடங்கண் என்னும் - இடம்பெற அகன்று நீண்ட இரண்டு மலர்க் கண்களாகிய; குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் - உள்ளங் கைகளாலே முகந்து கொண்டு பருகுவார்; குவளைக் கொம்பின் உடம்பெலாம் கண்கள் ஆயின் - குவளையை மெய்ம்முழுதும் பூத்ததொரு கொம்புபோலே உடம்பெலாம் பொருந்தக் கண்களானால்; ஒருவர்க்கும் இன்றி - இவர்கள் ஒருவர்க்கும் இல்லையாம்படி; அடங்க ஏற்ப - இவன் மெய்ம் முற்றும் அக் கண்களிடத்தே வந்து நிறைய; வாய் வைத்திட்டு ஆரப் பருகியிட்டீமின் என்பார் - அதனை இட்டு வைத்துப் பொருந்த நுகருமின் என்றுரைப்பர்.

   (வி - ம்.) இட்டீமின் : வினைத்திரிசொல். இரு கண்களால் நுகர முடியாதென்பார், 'உடம்பெலாங் கண்களாயின்' என்றார்.

( 176 )
2554 முலைமுத றுறத்த வன்றே
  மூரித்தா ளாளி யானைத்
தலைநிலம் புரள வெண்கோ
  டுண்டதே போன்று தன்கைச்
சிலையிடம் பிடித்த ஞான்றே
  தெவ்வரைச் செகுத்த நம்பி
நிலவுமிழ் குடையி னீழற்
  றுஞ்சுக வைய மென்பார்.

   (இ - ள்.) மூரித்தாள் ஆளி - வலிய கால்களையுடைய ஆளி; முலைமுதல் துறந்த ஞான்றே - பால் பருகுதலை மறந்த அப்போதே; யானைத் தலை நிலம் புரள வெண்கோடு உண்டதே போன்று - யானையின் தலை நிலத்தே புரளும்படி அதன் கோட்டைப் பற்றி உண்டதைப்போல; தன் கையிடம் சிலை பிடித்த ஞான்றே - தன் கையிலே வில்லைப் பற்றி (நிரைமீட்ட) அன்றே; தெவ்வரைச் செகுத்த நம்பி - பகைவரைக் கொன்ற நம்பியினது; நிலவு உமிழ் குடையின் நீழல் வையம் துஞ்சுக என்பார் - ஒளிய உமிழும் குடை நிழலிலே இவ்வுலகு தங்குக என்பார்.

   (வி - ம்.) தெவ்வர் என்ற பன்மை பிள்ளைகள் நூற்றுவரையுங் கருதி. வேடர் பகைவரல்லர் என்பது ஆண்டே விளக்கப்பட்டது.