| முத்தி இலம்பகம் |
1441 |
|
|
|
யானைக்குக் கோட்டைப் பறித்த பின்னரும் சிறிது பொழுது பதைத்து உயிர் போகுமாறுபோல, நிரைமீட்ட அன்று தொட்டும் இவன் நமக்குப் பகையாவன் என்னுங் கருத்துடன் பதைத்துப் பட்டான் என்று தாம் கருதி யிருந்தமை கூறினார். அவன் பதைத்தமை, 'வாளுற்ற புண்ணுள் வடிவே லெறிந்திற்றதே போல்' (சீவக. 455) என்றதனான் உணர்க.
|
( 177 ) |
வேறு
|
| 2555 |
இந்நகரப் புறங்காட்டி லிவன்பிறந்த வாறுந் | |
| |
தன்னிகரில் வாணிகனிற் றான்வளர்ந்த வாறுங் | |
| |
கைந்நிகரில் வேந்தர்தொழப் போந்ததுவுங் கண்டா | |
| |
லென்னைதவஞ் செய்யா திகழ்ந்திருப்ப தென்பார். | |
|
|
(இ - ள்.) இவண் இந்நகரப் புறங்காட்டிற் பிறந்த ஆறும் - இவன் இந் நகரச் சுடுகாட்டிலே பிறந்தபடியும்; தன்நிகர் இல்வாணிகன் இல் தான் வளர்ந்தஆறும் - தன் குலத்திற்கு ஒவ்வுதல் இல்லாத வாணிகன் இல்லிலே தான் வளர்ந்தபடியும்; கைநிகர் இல் வேந்தர் தொழப் போந்ததுவும் கண்டால் - ஒழுக்கத்திற்கு ஒப்பில்லாத அரசர்கள் தொழவந்த தன்மையும் பாக்கின; தவம் செய்யாது இகழ்ந்திருந்த தன்மை என் என்பார் - (நல்லறிவுடையோர்) தவம்புரியாமல் இகழ்ந்திருப்பது என்னை? என்பார்.
|
|
(வி - ம்.) 'பொன்னகர்' எனவும் பாடம். கண்டார் கூற்றாதலின் பிள்ளையார் குலத்திற்கு ஒவ்வாத வாணிகன் என்றார். (பிள்ளையார் : சீவகன்.)
|
( 178 ) |
| 2556 |
பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினுந் | |
| |
திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்ட | |
| |
மொரு முழமுஞ் சேறலில ரேனும் பொரு ளூர்க்கே | |
| |
வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ. | |
|
|
(இ - ள்.) முழங்கு பெருந்திரை வரைகள் நீந்திப் பிணியுறினும் - முழங்குகின்ற பெருங்கடலையும் மலைகளையுங் கடந்து வருந்தினும்; திருமுயங்கல் இல்லையெனின் பொருள் ஈட்டம் இல்லை - நல்லூழ் கூடுதல் இல்லையாயிற் பொருள் தேடுதல் இல்லை யாம்; ஒரு முழமும் சேறல் இலரேனும் - ஒருமுழ நீளமும் செல்லுதல் இலராயினும்; பொருள் உழந்து வழிவினாய் ஊர்க்கே வரும் - (நல்வினை யிருப்பின்) பொருள் உழந்து தானே வழி கேட்டு அவர் இருந்த ஊர்க்கே வரும்; தவம் வாழ்க! - ஆகவே தவம் வாழ்க.
|
|
(வி - ம்.) கடத்தற் கருமையின், 'வரையையும் நீந்தி' என்றார். தந்தை முறையால் தேடிய பொருள் தானே வந்து இவனுக்கு எய்திற்றென்றார்.
|
( 179 ) |