| முத்தி இலம்பகம் | 
1443  | 
 | 
  | 
| 
 சூழ்ந்த - சிறந்த பொன் மதில் சூழ்ந்த; விரைவாய் பூம்பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தான் - மணம் மாறாது பொருந்திய மலர்ப்பிண்டி வேந்தனாகிய அருகன் கோயிலுக்கு எழுந்தான். 
 | 
| 
    (வி - ம்.) சங்கு முத்தை யீன்று வருத்தம் இன்றித் தானே மேயும் எனவே, தன் பிள்ளைக்குச் செவிலியாய்த் தாழை முகை வளர்க்குமென்று கருதிற்றெனத் தோன்றல்காண்க; சங்கு தாழையின் முகைக்கு உவமை. உரையிடத்தனவாகிய நகர்; 'நிலநாவின் திரிதரூஉம்' என்றாற் போல. தெய்வத்தால் அசோகு விரைமாறாமல் நிற்கும். 
 | 
( 181 ) | 
|  2559 | 
அருகு மயில்கவ வன்ன |   |  
|   | 
  மேங்கக் குயில்கூவக் |   |  
|   | 
குருகு பொறையுயிர்க்குங் கொடுமுட் |   |  
|   | 
  டாழை வெண்டோட்டு |   |  
|   | 
முருகு பொறையுயிர்க்கு மொய்பூங் |   |  
|   | 
  காவிற் படைநீக்கித் |   |  
|   | 
திருகு கனைகழலான் செம்பொற் |   |  
|   | 
  கோயில் சோ்ந்தானே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அருகு மயில் அகவ - அருகே நின்று மயில் அகவவும்; அன்னம் ஏங்க - அன்னம் ஏங்கவும்; குயில் கூவ - குயில் கூவவும்; குருகு பொறை உயிர்க்கும் - நாரை முட்டை யிடுகின்ற; கொடுமுள் தாழை வெண் தோட்டு முருகு பொறை உயிர்க்கும் மொய்பூங்காவில் - கொடிய முள்ளையுடைய தாழை தன் வெள்ளிய இதழிலே சுமந்திருந்த தேனாகிய சுமையைச் சொரியும் மலர் நிறைந்த பொழிலிலே; படைநீக்கி - படையை நிறுத்திவிட்டு; செம்பொன் கோயில் திருகு கனைகழலான் சேர்ந்தான் - அருகன் கோயிலைத் திருகிய, ஒலிக்குங் கழலணிந்த சீவகன் அடைந்தான். 
 | 
| 
    (வி - ம்.) மயிலும் அன்னமும் குயிலும் கூவக் குருகு பொறை உயிர்க்குங்கா வெனவே, குருகின்வருத்தத்திற்கு அவைகளும் வருந்தின என்பது தோன்றிற்று. 
 | 
( 182 ) | 
|  2560 | 
திறந்த மணிக்கதவந் திசைக |   |  
|   | 
  ளெல்லா மணந்தேக்கி |   |  
|   | 
மறைந்த வகிற்புகையான் மன்னர் |   |  
|   | 
  மன்னன் வலஞ்செய்து |   |  
|   | 
பிறந்தே னினிப்பிறவேன் பிறவா |   |  
|   | 
  தாயைப் பெற்றேனென் |   |  
|   | 
றிறைஞ்சி முடிதுளக்கி யேத்திக் |   |  
|   | 
  கையாற் றொழுதானே. |   | 
 
 
 |