| முத்தி இலம்பகம் |
1447 |
|
|
|
கொம்பினை அறுத்துச் செய்த மணிகள் இழைத்த கட்டிலில் அமர்ந்து; புலமகள் புகழப் பொய்தீர் பூமகள் புணர்ந்து? நாமகள் புகழக் குற்றம் அற்ற திருமகளைப் புணர்ந்து; வேந்தர் குழாத்திடை நிவந்து இருந்தான் - மன்னர் திரளினிடையே மேம்பட இருந்தான்.
|
|
(வி - ம்.) 'நிவந்து' என்றார் அரசரில் தான் மேலாக இருத்தலின்.
|
( 189 ) |
| 2567 |
எத்துணைத் தவஞ்செய் தான்கொ | |
| |
லென்றெழுந் துலக மேத்த | |
| |
வித்திய புகழி னாற்கு | |
| |
விருந்தர சியற்றி நாடு | |
| |
மொத்தன னல்கித் தன்னை | |
| |
யுழந்தனள் வளர்த்த தாய்க்குச் | |
| |
சித்திரத் தேவிப் பட்டந் | |
| |
திருமக னல்கி னானே. | |
|
|
(இ - ள்.) எத்துணைத் தவம் செய்தான் கொல் என்று எழுந்து உலகம் ஏத்த - 'இவன் எவ்வளவு தவம் புரிந்தானோ' என்று எடுத்து உலகம் புகழ; வித்திய புகழினாற்கு - நட்ட புகழையுடைய கந்துக்கடனுக்கு; விருந்து ஒத்தனன் அரசு இயற்றி - புதிய அரசுரிமையை மனம் விரும்பி நல்கி; நாடும் நல்கி - நாட்டையும் கொடுத்து; தன்னை உழந்தனள வளர்த்த தாய்க்கு - தன்னை வருந்தி வளர்த்த சுநந்தைக்கு; சித்திரத் தேவிப்பட்டம் - நன்றாகிய தேவி என்னும் பட்டத்தையும்; திருமகன் நல்கினான் - சீவகன் கொடுத்தனன்.
|
|
(வி - ம்.) 'அந்தணா ளர்க்கு அரசுவரைவின்றே' (தொல். மரபு. 82); என்பதனால், ஈண்டு அளித்தது குறுநில மன்னர்க்குரிய அரசாயிற்று ; 'முடியுடை வேந்தனாந்தன்மை வணிகனுக்கில்லையாதலின்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 190 ) |
| 2568 |
இனக்களி யானை மன்ன | |
| |
ரிளவுடை யானென் றேத்தத் | |
| |
தனக்கிளை யானை நாட்டித் | |
| |
தான்றனக் கென்று கூறிச் | |
| |
சினக்களி யானை மன்னர் | |
| |
மகளிரைச் சோ்த்தி நம்பன் | |
| |
மனக்கினி துறைக வென்று | |
| |
வளங்கெழு நாடு மீந்தான். | |
|