| முத்தி இலம்பகம் |
1449 |
|
|
|
(வி - ம்.) அருநிதியும் அரசும் எனினுமாம். மணியாழி என்றது அரசனாற் கொடுக்கப்படும் பட்டத்திற்கு அறிகுறியாகிய ஏனாதி மோதிரத்தை. தோழர் - பதுமுகன் முதலியோர்.
|
( 192 ) |
| 2570 |
வளர்த்தகைத் தாயர் தம்மை | |
| |
வருகென வருளித் தங்கள் | |
| |
கிளைக்கெலாஞ் சிறப்புச் செய்து | |
| |
கேட்டவர் மருள வைந்தூர் | |
| |
விளைத்துள கெடாத வைக | |
| |
லாயிர மிறுப்புத் தண்டக் | |
| |
கொளக்கொடுத் தயா வுயிர்த்தான் | |
| |
கொற்றவ னென்ப வன்றே. | |
|
|
(இ - ள்.) வளர்த்த கைத் தாயர் தம்மை - தன்னை வளர்த்த செவிலித்தாயர்களை; வருக என அருளி - வருக என்று அழைத்து; தங்கள் கிளைக்கு எலாம் சிறப்புச் செய்து - அவர்களுடைய உறவினர்க்கெல்லாம் சிறப்பு நல்கி; கேட்டவர் மருள - கேட்டோர் மயங்கும்படி; ஐந்து ஊர் - ஐந்தூர்களை; விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக் கொளக்கொடுத்து - உலகில் விளைதற்குள்ளனவற்றை யெல்லாம் விளை வித்துக் கெடாத, நாடோறும் ஆயிரம் பொன் இறுப்புத்தண்டத் தக்கவாகக் கொள்ளும்படி கொடுத்து; கொற்றவன் அயாவுயிர்த் தான் - அரசன் இளைப்பாறினான்.
|
|
(வி - ம்.) என்ப : அன்று ஏ : அசைகள்.
|
|
கைத்தாயர் - செவிலித்தாயர். தங்கள் என்றது அவர்கள் என்னும் சுட்டுப்பொருட்டாய் நின்றது. உள விளைத்துவைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக் கெடாத ஊர் ஐந்து கொடுத்து என இயைக்க. கொற்றவன் : சீவகன்.
|
( 193 ) |
| 2571 |
கைத்தல மந்தி கொண்ட | |
| |
கைமகப் போன்று தன்கட் | |
| |
பத்திமை விடாது மேனாட் | |
| |
படைக்கல நவின்ற பொற்றோ் | |
| |
மைத்துன மன்னர்க் கெல்லாம் | |
| |
வளநிதி மணிசெய் மான்றோ் | |
| |
தத்துநீர் மிசைச்சென் மாவுந் | |
| |
தவழ்மதக் களிறு மீந்தான். | |
|
|
(இ - ள்.) மந்தி கைத்தலம் கொண்ட - மந்தியைக் கையாலே தழுவிக் கொண்ட; கைமகப் போன்று - ஒழுக்கத்தை
|