பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1450 

யுடைய மகவைப்போல; தன் கண் பத்திமை விடாது - தன்னிடம் பத்தியை விடாமல்; மேல் நாள் படைக்கலம் நவின்ற - முற்காலத்தே படைக்கலம் பயின்ற; பொன்தேர் மைத்துன மன்னர்க்கு எல்லாம் - பொற்றேரையுடைய மைத்துன வேந்தர் கட்கெல்லாம்; மணிசெய் மானதேர் மணிகள் இழைத்த குதிரைபூட்டிய தேரையும்; தத்தும் நீர்மிசைச் செல்மாவும் - அலையுடைய நீரின்மேற் செல்லும் குதிரையையும்; தவழ்மதக் களிறும் ஈந்தான் - தவழும் மதமுடைய களிற்றைங் கொடுத்தான்.

   (வி - ம்.) 'மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் - அவையும் அன்ன அப்பா லான', (தொல். மரபு. 14) - என்றாராதலின் 'மகவு' என்றார். 'மான் தேரும்' என உம்மை விரிக்க.

   மைத்துன மன்னர்! உலோகபாலன் விசயன் முதலோர்.

( 194 )
2572 கோமகன் கோல மான்றோ்க்
  கோவிந்த னென்னுங் கொய்தார்
மாமற்கு மடங்க லாற்றற்
  கட்டியங் கார னென்ற
தீமக னுடைய வெல்லாந்
  தோ்ந்தனன் கொடுத்துச் செல்வ
னோவலில் கறவை யொத்தா
  னுலோகபா லற்கு மாதோ.

   (இ - ள்.) கோமகன் கோல மான்தேர்க் கோவிந்தன் என்னும் கொய்தார் மாமற்கு - கோமகனாகிய அழகிய குதிரை பூட்டிய தேரையுடைய கோவிந்தன் என்னும் மாமனுக்கு; மடங்கல் ஆற்றல் கட்டியங்காரன் என்ற தீமகனுடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்து - கட்டியங்காரனென்னும் தீயவனுடைய வற்றையெல்லாம் ஆராய்ந்து கொடுத்து; செல்வன உலோகபாலற்கு ஓவல்இல் கறவை ஒத்தான் - செல்வனாகிய சீவகன் உலோகபாலன் என்னும் வேந்தனுக்கு ஒழிவின்றி நல்கும் கறவையைப் போன்றான்.

   (வி - ம்.) கோமகன் ஆகிய கோவிந்தன் என்க. மடங்கல் - சிங்கம். தீமகன் - தீயவன். தேர்ந்தனன் : முற்றெச்சம். செல்வன் : எழுவாய்; சீவகன். ஓவல் - ஒழிதல். கறவை - கறக்கும் ஆள். மாது, ஓ : அசைகள்.

( 195 )
2573 பேரிடர் தன்க ணீக்கிப்
  பெரும்புணை யாய தோழற்
கோரிடஞ் செய்து பொன்னா
  லவனுரு வியற்றி யூரும்