| முத்தி இலம்பகம் |
1452 |
|
|
|
(இ - ள்.) கொட்டமே கமழும் - மணமே கமழ்கின்ற; குளிர் தாமரை மொட்டின் வீங்கிய வெம்முலை - குளிர்ந்த தாமரை மொட்டைப் போலப் பருத்த வெம்முலைகளையும்; மொய் குழல் - நெருங்கிய கூந்தலையும்; அட்டும் தேன் அழியும் மது மாலையார் - சொரியும் தேன் அழியும் மாலையணிந்த மங்கையர்; எண்மரும் பட்டம் பார்தொழ எய்தினார் - எண்மரும் பார்தொழுமாறு பட்டம் பெற்றனர்.
|
|
(வி - ம்.) கொட்டம் - மணம். மொட்டு - அரும்பு. மொய்குழல் : வினைத்தொகை. மதுமாலை என்புழி - மது, அடைமொழி மாத்திரையாய் நின்றது. பார்தொழ எண்மரும் பட்டம் எய்தினார் என்க.
|
( 198 ) |
| 2576 |
பஞ்சி சூழல்குற் பல்வளை வீங்குதோள் | |
| |
வஞ்சி நுண்ணிடை வம்பணி வெம்முலை | |
| |
விஞ்சை யன்மகள் சீறடி வீழ்ந்தன | |
| |
ரஞ்சி லோதிய ரும்பவிழ் கோதையார். | |
|
|
(இ - ள்.) அம் சில் ஓதி அரும்பு அவிழ் கோதையார் - அழகிய சிலவாகிய கூந்தலையும் அரும்பு மலருங் கோதையினையும் உடைய குணமாலை முதலிய எழுவரும்; பஞ்சி சூழ் அல்குல் - ஆடையணிந்த அல்குலையும்; பல்வளை வீங்கு தோள் - பல வளையல்களை அணிந்த பருத்த தோளையும்; வஞ்சி நுண் இடை - வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும்; வம்பு அணி வெம்முலை - கச்சணிந்த வெம்முலையையும் உடைய; விஞ்சையன் மகள் சீறடி வீழ்ந்தனர் - தந்தையின் சிற்றடிகளிலே விழுந்து வணங்கினர்.
|
|
(வி - ம்.) பஞ்சி - ஈண்டு ஆடை. வஞ்சி - கொடி. வம்பு - கச்சு. விஞ்சையன் மகள் : காந்தருவதத்தை. கோதையார் என்றது ஏனைய மனைவிமார் எழுவரையும்.
|
( 199 ) |
| 2577 |
வீடி லைந்தரைக் கோடி விருத்திமே | |
| |
னாடி யாயிர நாடொறு நங்கைமார்க் | |
| |
காடு சாந்தடி சிற்புற மாக்கினான் | |
| |
கோடு வாலொளிக் குங்குமக் குன்றனான். | |
|
|
(இ - ள்.) நங்கைமார்க்கு - அம் மங்கையர்க்கு; வீடு இல் ஐந்தரைக் கோடி விருத்தி - கெடாத ஐந்தரைக் கோடி பொன் வாழ்க்கைப் பொருளும்; மேல் நாடி ஆடு சாந்து அடிசில் - மேலும் அவர்க்கு அண்ணிதாக வேண்டும் என்று சாந்துக்கும் உணவுக்கும்; நாடொறும் ஆயிரம் - நாளொன்றுக்கு ஆயிரம் பொன்னுக்குரியதாம்படி; கோடு வால் ஒளிக் குங்குமக் குன்றனான்
|