|  முத்தி இலம்பகம் | 
 1453  | 
 | 
  | 
| 
 நுடங்கும் அழகிய ஒளியுடைய, குங்குமக் குன்று போன்றவன்; புறம் ஆக்கினான் - இறையிலி நிலமாக நல்கினான். 
 | 
| 
    (வி - ம்.) வீடு - விடுதலுமாம். விருத்தி - (வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்) சீவிதம். ஆடு - அடுத்திருப்பது. ஆடு - ஆடுதலுமாம். அடிசில் - உணவு. புறம் - இறையிலி. குன்றனான் : சீவகன். 
 | 
 ( 200 ) | 
|  2578 | 
ஆனை மும்மத மாடிய காடெலா |   |  
|   | 
மானை நோக்கியர் வாய்மது வாடின |   |  
|   | 
வேனன் மல்கிவெண் டோ்சென்ற வெந்நிலம் |   |  
|   | 
பானன் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆனை மும்மதம் ஆடிய காடு எலாம் - யானையின் மும்மதம் ஆடிய காடுகள் எல்லாம்; மான் நை நோக்கியர் வாய் மது ஆடின - மான் வருந்தும் பார்வையுடைய மகளிரின் வாயிலிருந்து கொப்பளித்த தேன் ஆடின; வேனல் மல்கி வெண்தேர் சென்ற வெம் நிலம் - கோடை நிறைந்து பேய்த்தேர் சென்ற வெப்பம் மிக்க நிலம்; பானல் மல்கி வெண்பால் அன்னம் பாய்ந்த - குவளை நிறைந்து வெண்மையான பால் போன்ற நிறமுடைய அன்னப் பறவைகள் பரவின. 
 | 
| 
    (வி - ம்.) காடு கெடுத்து நாடாக்கினான் என்க. ‘புறவே, ஒள்ளிழை மகளிரொடு மள்ளர்மேன‘ (பதிற். 13) என்றார் பிறரும். 
 | 
| 
    மும்மத யானையாடிய காடு எனினுமாம். மான் நை நோக்கியர் எனக் கண்ணழித்துக் கொள்க. நைநோக்கியர் : வினைத்தொகை. வேனல் - வேனில், வெண்டேர் - பேய்த்தேர். பானல் - குவளை. 
 | 
 ( 201 ) | 
|  2579 | 
மாரி மல்கி வளங்கெழு மண்மகள் |   |  
|   | 
வாரி மல்கி வரம்பில ளாயினா |   |  
|   | 
ளாரி யாவடி சிற்றளி யானெய்வார்ந் |   |  
|   | 
தேரி யாயின வெங்கணு மென்பவே |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மாரி மல்கி - மழை நிறையப் பெய்து; வளம் கெழு மண்மகள் வாரி மல்கி வரம்பு இலள் ஆயினாள் - வளம் பொருந்திய நிலமகள் விளைவு நிறைந்து எல்லையைக் கடந்தாள்; ஆரியா - அதற்கு மேலாக; அடிசில் தளி ஆன் நெய் வார்ந்து - மடைப் பள்ளியினின்றும் ஆவின் நெய் ஒழுகுதலால்; எங்கணும் ஏரி ஆயின என்ப - எவ்விடமும் ஏரிகளாயின என்பர். 
 | 
| 
    (வி - ம்.) மாரி - மழை. மண்மகள் - நிலம். வாரி - வருவாய். ஆரி - மேல். ஆக, ஈறு கெட்டு ஆ என நின்றது. அடிசிற்றளி - மடைப் பள்ளி. ஆனெய் - பசுவின் நெய். ஆனெய் வார்ந்து ஏரியாயின என்றதனால் பசுக்கள் மிக்குப் பால் சுரந்தன என்பது பெற்றாம். 
 | 
 ( 202 ) |