முத்தி இலம்பகம் |
1458 |
|
|
(இ - ள்.) அருவிலை நன்கலம் செய்போர்வை - அரிய விலைபெற்ற நல்ல கலன்களைப் புறத்தே காட்டும் மெல்லிய போர்வையுடன்; அன்னம் நாண அடி ஒதுங்கிச் சென்று - அன்னமும் வெள்க அடியிட்டு ஒதுங்கி நடந்து; உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு ஒல்கி - தன் பழைய உருவம் புலப்படாமல், ஒடியும் இடை நுடங்க; கோமான் அடி தொழுதபின் - அரசன் அடியை வணங்கின பிறகு; மருவு இன்சாயல் - பொருந்திய இனிய சாயலாள்; மணி மெல்விரல் கூப்பி ஓலைநீட்ட - அழகிய மெல்லிய விரலைக் கூப்பி ஓலையை நீட்ட; இரவி என்ன விளங்கும் ஒளி இறைவன் - ஞாயிறுபோல விளங்கும் ஒளியையுடைய இறைவன்; கொண்டு ஆங்கு அது நோக்கும் - கையிற் கொண்டு அங்கே அதனைப் படிக்கலுற்றான்.
|
(வி - ம்.) நோக்கும் என்பதனைப் பெயரெச்சமாக்கி, ‘நோக்கும் இறைவன்‘ எனக் குளகம் ஆக்குவர் நச்சினார்க்கினியர்.
|
அருவிலைப் போர்வை, நன்கலம் செய் போர்வை என இயைக்க. நன்கலத்தைப் புறத்தே காட்டும் நுண்போர்வை என்றவாறு. அன்னமும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது. ஒல்கி - ஒல்க. கோமான் - சீவகன்; மருவின்சாயல் என்றது தேசிகப்பாவையை. இரவி - ஞாயிறு இறைவன் : சீவகன். அது அவ்வோலையை.
|
( 209 ) |
2587 |
அடிகள் கண்டாங் குவந்தருளுக | |
|
வநங்கமாலை யடிவீழ்ச்சிமுன் | |
|
கொடிய வேலான் கொதித்தரங்கி | |
|
னீக்கிக்கோயிற் சிறைவைத்தபின் | |
|
கடிசெய் பைந்தார்க் கமழ்மாலைவேற் | |
|
கந்து கற்குச் சிறுவயானிப் | |
|
படிய னல்காய் பசுமணிகள்வேய்ந் | |
|
தோங்கும்பைம்பொற் செறிகழலினாய். | |
|
(இ - ள்.) அநங்கமாலை அடிவீழ்ச்சி அடிகள் கண்டு ஆங்கு உவந்தருளுக - அநங்கமாலை அடியிலே வீழ்ந்து வணங்கு வதை அடிகள் கண்டு மகிழ்ந்தருளுக; முன் கொடிய வேலான் கொதித்து - முன்னர்க் கொடியவனான கட்டியங்காரன் மனங் கொதித்து; அரங்கின் நீக்கிக் கோயில் சிறை வைத்தபின் - அரங்கினின்றும் நீக்கிக் கோயிலிலே சிறைப்படுத்திய பிறகு; கடிசெய் பைந்தார்க் கமழ்மாலை வேல் கந்துகற்குச் சிறுவ! - மணம் பொருந்திய தாரினையும் மணங்கமழும் மாலையணிந்த வேலினையும் உடைய கந்துகன் மகனே!; அனல்வாய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும் பைம்பொன் செறிகழலினாய்! - அனலைக் காய்ந்த மணியும
|