| முத்தி இலம்பகம் |
1463 |
|
|
|
தோற்றினாள் - உருள்கின்ற முத்துக்கள் பொருந்திய அரும்பு முலையினாள் மனத்திலே மகிழ்வு காட்டினாள்.
|
|
(வி - ம்.) மயக்கின் : இன் : ஏதுப் பொருட்டு; அறிவை அளந்து காட்ட எனவே, குறிப்பான் அறிவின்மையையே ஈண்டுக் காட்டிற்று. இனி, 'ஆற்றிசைக்கும்' என்று பாடம் ஓதி, மயக்கினால் தெருளலான் என்று கருதி, நன்னெறியிலே இசைக்கும் என்னறிவை அளக்கிய என்றுமாம். 'திகைக்கும்' என்று பாடமாயின,. 'மயக்கினால் திகைக்கும் தெருளலான்' என்க. யான் நின்னை மறப்பேனோ எனவே தேசிகப் பாவையே யாயினாள். காமன் ஜங்கணையைத் தன்னிடத்தே உடைய தேசிகப் பாவை யெனவே வேட்கையைத் தான் நிகழ்த்துவாளாயிற்று. 'தோற்றினாள்' எனச் சினைவினை முதலொடு முடிந்தது.
|
( 216 ) |
| 2594 |
முறுவற்றிங்கண் முகவரங்கின்மேன் | |
| |
முரிந்துநீண்ட புருவக்கைக | |
| |
ணெறியின்வட்டித்து நீண்டவுண்கண் | |
| |
சென்றும்வந்தும் பிறழ்ந்துமாடப் | |
| |
பொறிகொள்பூஞ் சிலம்புமேகலைகளும் | |
| |
புணர்ந்தவின்னியங்க ளார்ப்பவேந்த | |
| |
னறியுநாடகங் கண்டான்பைந்தா | |
| |
ரலர்ந்துமாதர் நலங்குழைந்ததே. | |
|
|
(இ - ள்.) பொறிகொள் பூஞ்சிலம்பும் மேகலைகளும் புணர்ந்த இன் இயங்கள் ஆர்ப்ப - பூவேலை பொறித்த சிலம்பும் மேகலைகளும் கூடிய இனிய இயங்கள் ஆர்ப்பவும்; முறுவல் திங்கள்முக அரங்கின் மேல் - முறுவலையுடயதொரு திங்களாகிய முக அரங்கின் மிசை; முரிந்து நீண்ட புருவக் கைகள் நெறியின் வட்டித்து - ஒசிந்து நீண்ட புருவமாகிய கைகளை முறைப்படி சுழற்றி; நீண்ட உண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆட - நீண்ட, மைதீட்டிய கண்கள் சென்றும் வந்தும் மாறியும் ஆட ; வேந்தன் அறியும் நாடகம் கண்டான் - சீவகன் முன்னர் அவளிடத்தே கண்ட நாடகத்தை (மீட்டும்) கண்டான்; பைந்தார் அலர்ந்து மாதர் நலம் குழைந்தது - (அப்போது) அவனுடைய பைந்தார் அலர்ந்து, அவளுடைய நலம் நெகிழ்ந்தது.
|
|
(வி - ம்.) நெறியின் - புணர்ச்சிக் காலத்து நிகழும் முறையானே. அவன் தொழிலாற் சிலம்பும், அவள் தொழிலால் மேகலையும் ஆர்த்தன. அறியும் நாடகம் எனவே, முன் புணர்ந்த தேசிகப் பாவையே ஆயிற்று.
|
( 217 ) |
| 2595 |
நான்மருப்பின் மதயானை | |
| |
நறியபைந்தா மரைமடந்தையைத் | |
| |
தேன்மதர்த்த திளைத்தாங்கவன் | |
| |
றிருவின்சாய னலங்கவர்ந்தபி | |
|