முத்தி இலம்பகம் |
1471 |
|
|
2601 |
அடிசிற் கலங் கழீஇக் கருனை யார்ந்த வினவாளை | |
|
மடுவின் மதத்துணரா வாழைத் தண்டிற் பலதுஞ்சு | |
|
நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சோ்த்தி விழவ யர்ந்து | |
|
வடிநீர் நெடுங்கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே. | |
|
(இ - ள்.) அடிசில் கலம் கழீஇ - அடிசில் ஆக்கும் கலங்களைக் கழுவுதலாலே; கருணை ஆர்ந்த இனவாளை - பொரிக்கறியை நுகர்ந்த திரளாகிய வாளைகள்; மடுவில் மதர்த்து உணரா - மடுவின்கண்ணே செருக்கிக் கரையேற அறியவாய்; வாழைத்தண்டில் பல துஞ்சும் - வாழைத் தண்டின் மேலே பலவுந் துயிலும்; நெடுநீர்க் கழனி சூழ் நியமம் சேர்த்தி - மிகு நீரையுடைய கழனி சூழ்ந்த ஊரை இறையிலியாக விட்டு; விழவு அயர்ந்து - திருநாளையும் இயற்றி ; வடிநீர் நெடுங்கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தார் - கூரிய பண்புடைய கண்ணாராகிய நாடக மகளிரின் கூத்தும் பாட்டும் வகுத்தனர்.
|
(வி - ம்.) அடிசிலார்க்கும் கலம் என்க. கருணை - பொரிக்கறி. கரையேற உணராவாய் என்க. துஞ்சும் - உறங்கும். நெடுநீர் என்புழி - நெடுமை. மிகுதிகுறித்து நின்றது. நியமம் - ஊர் : ஆகுபெயர்; இறையிலி - காவலற்கு வரிகொடாமல் பயன்கொள்ளும் நிலம். அரசன் ஏவலின் அமைச்சர் இயற்றுவித்தார் என்றவாறு
|
( 3 ) |
2602 |
அல்லி யரும்பதமு | |
|
மடகுங்காயுங் குளநெல்லு | |
|
நல்ல கொழும்பழனுங் | |
|
கிழங்குந்தந்து நவைதீர்த்தார்க் | |
|
கில்லையே கைம்மாறென் | |
|
றின்பமெல்லா மவர்க்கீந்தாள் | |
|
வில்லோன் பெருமாட்டி | |
|
விளங்குவேற்கண் விசயையே. | |
|
(இ - ள்.) அல்லி அரும்பதமும் - அல்லி அரிசியால் ஆக்கிய உணவும்; அடகும் - கீரையும்; காயும் - காயும்; குளநெல்லும் - குளநெல்லும்; நல்ல கொழும் பழனும் - நல்ல வளமிகு பழமும்; கிழங்கும் - கிழங்கும்; தந்து நவை தீர்த்தார்க்கு - (தனக்குக்) கொடுத்துப் பசித்துன்பத்தைப் போக்கிய துறவிகட்கு; கைம்மாறு இல்லையே என்று - கைம்மாறாகக் கொடுத்தற்குரியவை இல்லையே என்று கருதி; வில்லோன் பெருமாட்டி விளங்கு வேல்கண் விசயை - சச்சந்தனின் பெருமாட்டியாகிய, விளங்கும் வேல்போலுங் கண்ணாள் விசையையானவள்; இன்பம்
|