முத்தி இலம்பகம் |
1472 |
|
|
எல்லாம் அவர்க்கு ஈந்தாள் - (தான் கோயில் கட்டி வழிபாடு செய்த) பயன் எல்லாவற்றையும் அவர்க்குக் கொடுத்தாள்.
|
(வி - ம்.) விசையை தானையுடன் தனித்து வாராமற் கூடப் போந்தமை பற்றி, 'நவை தீர்த்தார்' என்றார்; அவர்கள் பொருள்கண் மேற் பற்றற்றவர்கள் ஆதலின், அவர்கள் செய்த உதவிக்குத் தன்னாற் செய்யலாம் உதவி இன்னது என்று கருதிக் 'கைம்மாறில்லை' என்றார்.
|
( 4 ) |
2603 |
தனியே துயருழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டு | |
|
ளினியா ளிடர்நீக்கி யேமஞ்சோ்த்தி யுயக்கொண்ட | |
|
கனியார் மொழியாட்கு மயிற்குங் காமர் பதிநல்கி | |
|
முனியாது தான்காண மொய்கொண்மாடத் தெழுதுவித்தாள். | |
|
(இ - ள்.) தனியே துயர் உழந்து - தனித்து வருத்தம் உறுகையினாலே; தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள் - பையப் பைய வீழ்ந்த - சுடுகாட்டிலே; இனியாள் இடர் நீக்கி - இனியளாகிய விசயையின் இடரை நீக்கி; ஏமம் சேர்த்தி உயக்கொண்ட - காவலான இடத்திற் சேர்த்துப் பிழைப்பித்துக்கொண்ட; கனியார் மொழியாட்கும் மயிற்கும் - இனிய மொழியாளாகிய தெய்வத்திற்கும் மயிலுக்கும்; காமர் பதி நல்கி - விருப்புறும் கோயில் சமைத்து; முனியாது தான் காண - தான் எப்போதும் காணும்படி; மெய்கொள் மாடத்து எழுதுவித்தாள் - தனக்குரிய மாடத்திலே எழுதுவித்தாள்.
|
(வி - ம்.) தெய்வத்திற்குக் கோயில் கட்டி மயிலைத் தன் மாடத்திலே எழுதுவித்தாள்.
|
( 5 ) |
2604 |
வெண்ணெ யுருக்கிநெய் வெள்ள | |
|
மாகச் சொரிந்தூட்டப் | |
|
பண்ணிப் பரிவகன்றாள் பைந்தார் | |
|
வேந்தற் பயந்தாளே. | |
|
அண்ணல் பிறந்தாங் கைஞ்ஞூற் | |
|
றைவர்க் களந்தான்பால் | |
|
வண்ணச் சுவையமுதல் வைக | |
|
நாளுங் கோவிந்தன் | |
|
(இ - ள்.) அண்ணல் பிறந்த ஆங்கு - சீவகன் பிறந்த இடமாகிய சுடுகாட்டிலே; ஐஞ்ஞூற்றைவர்க்கு ஆன்பால் அளந்து - ஐந்நூற்றைந்து குழந்தைகட்கு ஆவின்பால் அளந்து; நாளும் வண்ணச் சுவை அமுதம் வைக - எப்போதும் அழகிய சுவையுடன் கூடிய பருப்புச்சோறு நிலைபெற; வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளமாகச் சொரிந்து - வெண்ணெயை உருக்கி நெய்யை
|